இந்த கல்யாண சீசன் அளவற்ற மகிழ்வையும் கூடவே பல டன் கணக்கு உணவு மிச்சங்களையும் உருவாக்கியிருக்கிறது. பல குடும்பங்கள் சாப்பாடு வீணாவதைத் தடுக்க முயற்சிகள் எடுத்தாலும் குப்பைக்கூடங்கள் உணவுப்பொருட்களால் நிரம்பி வழிவதைத் தடுக்க முடிவதில்லை. ஆனால், உணவு வீணாவதை இரண்டு விஷயங்களால் தடுக்க முடியும் – முறையான திட்டமிடல் மற்றும் இல்லாதவர்களுக்கு கொடுக்கும் மனம்.


வங்காளத்தில் பெண் ஒருவர் தனது தம்பியின் திருமணத்தில் மிஞ்சிப்போன உணவுகளை எடுத்துகொண்டு வந்து நடுராத்திரியில் ரயில் நிலையத்தில் வைத்து அனைவருக்கும் பரிமாறியது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகியிருக்கிறது. கல்யாண உடையில் ரனாகத் ரயில் நிலையத்தில் வாளிகளில் உணவுப் பதார்த்தங்கள் நிரம்பியிருக்க காகித ப்ளேட்களில் தேவைப்படுவோருக்கு உணவு பரிமாறியிருக்கிறார் பாப்பியா கர். சுமார் இரவு ஒரு மணி அளவில் நடந்த இந்த நிகழ்வை திருமண புகைப்படக்காரர் நிலஞ்சன் மண்டல் புகைப்படங்களாகப் பதிவு செய்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் ig_calcutta என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணக் கிடைக்கும்.



முகநூலில் பதிவிடப்பட்ட இந்த புகைப்படங்கள் 300 முறை பகிரப்பட்டிருக்கின்றன, 1200 லைக்குகள் இடப்பட்டிருக்கின்றன. பலர் தங்களது திருமணத்திலும் இதே போன்று செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் ஒருவர் ‘ எனக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று தெரியாது, ஆனால் என் திருமணத்தில் இதே போன்று உணவு தேவைப்படுவோருக்கு பகிர்ந்தளிக்கப்படும், என்னுடைய பதின் பருவத்திலிருந்து நான் இதை செய்ய வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறேன்’ என்று எழுதியிருக்கிறார். இன்னொருவர், கர் அனைவருக்கும் முன்மாதிரியாக இருப்பதாகவும் பல வருடங்களாக அவர் இந்த பணியை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மற்றொருவர், ‘இந்த நூற்றாண்டில் பலர் அடிப்படை வசதிகள் கூட இன்றி கஷ்டப்படுகின்றனர். அந்த வகையில், இது ஒரு தேர்ந்த செயல்பாடு. தெரிந்தும் தெரியாமலும் நாம் ஒருநாளைக்கு எத்தனை பொருட்களை வீணடிக்கிறோம்’ என்று கூறியிருக்கிறார்.


மேலும் படிக்க..


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்