இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து சேவையாக ரயில் போக்குவரத்து அமைந்துள்ளது. தினசரி லட்சக்கணக்கான மக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். இதில், பயணிகளின் கவனக்குறைவாலும், அஜாக்கிரதையாலும் ஏராளமான விபத்துகளையும் சந்திக்க நேரிடுகிறது. இதன் காரணமாக, பயணிகளின் பாதுகாப்பு கருதி ரயில்வே போலீசார் 24 மணி நேரமும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


தவறி விழுந்த பயணி:


இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணியை பெண் போலீசார் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது ராட்லாம் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் கடந்த 22-ந் தேதி இரவு 9 மணிக்கு ரயில் ஒன்று தண்டவாளத்தில் இருந்து மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.






காப்பாற்றிய பெண் போலீஸ்:


அப்போது, பயணி ஒருவர் ஒரு கையில் பையுடன் ஓடும் ரயிலில் ஓடி வந்து ஏற முயற்சித்தார். அப்போது, அவர் எதிர்பாராத விதமாக தவறி ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் அடியில் உள்ள இடைவெளியில் மாட்டிக்கொண்டார். அப்போது, அங்கே பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த பெண் ரயில்வே காவலர் துரிதமாக செயல்பட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் சென்று அந்த பயணியை பிடித்து பின்னோக்கி இழுத்தார்,


இதனால், ரயிலின் சக்கரத்தில் சிக்கியிருக்க வேண்டிய அந்த பயணி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலின் சக்கரத்தில் சிக்கியிருக்க வேண்டிய பயணியை சாமர்த்தியமாக செயல்பட்டு துரிதமாக காப்பாற்றிய ரயில்வே பெண் பாதுகாவலரை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.  


மேலும் படிக்க: Delhi murder case: டெல்லி கொடூரம்.. ஷ்ரத்தாவை ஆப்தாப் கொலை செய்தது ஏன்? குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்..!


மேலும் படிக்க: Crime : நாட்டையே உலுக்கியிருக்கும் கொடூரம்.. 20 மாத பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை..