உத்தரபிரதேச மாநில சுற்றுலாத்துறையும் டாக்டர் ராம் மனோகர் லோஹியா ஆவத் பல்கலை கழகமும் இணைந்து ஆற்றங்கரையில் 9 லட்சம் விளக்குகளை வைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இதனால் அயோத்தி நகரமே ஜொலித்தது.
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளியைக் கொண்டாடும் வகையில் உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்தது.
தேவாலயம் அருகே ஓரல் செக்ஸ் ப்ராங்க்.. அதிரடியாய் கைது செய்த போலீசார்!
அயோத்தியில் தீபோற்சவ விழா கொண்டாட்டங்கள் குறித்து பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், “இன்று நாம் 9 லட்சம் விளக்குகளை ஏற்றி வைத்துள்ளோம். இந்த விழாவையொட்டி அனைவருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் வண்ண விளக்குகள் மற்றும் லேசர் கண்காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கடந்த 5 வருடங்களாகவே அயோத்தியில் ஆண்டுதோறும் தீபாவளி தினத்தன்று வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக அயோத்தியில் சரயூ நதிக்கரையில் 5,84,572 விளக்குகளை வைத்து கடந்த ஆண்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது.
இதையடுத்து அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் இந்த ஆண்டு 9 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன. பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 43 லட்சம் மக்களுக்கு வீடு வழங்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் 9 லட்சம் விளக்குகள் வைக்கப்பட்டதாக அம்மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தீபாவளியை முன்னிட்டு 5 நாட்களுக்கு கொண்டாட்டங்கள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தீபோற்சவ விழாவையொட்டி புதன்கிழமை மாலை சரயு ஆற்றங்கரையில் 9 லட்சம் விளக்குகள், நகரின் மற்ற இடங்களில் 3 லட்சம் விளக்குகள் என மொத்தம் 12 லட்சம் விளக்குகள் அயோத்தியில் ஏற்றப்பட்டன.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: ‛நீ ஒன்னு குடு.. நான் ஒன்னு தரேன்..- புத்திசாலி குரங்கின் சேட்டை வைரல் வீடியோ !