ரஷ்யா தலைநகர் மாஸ்கோவின் பிரபலமான தேவாலயத்திற்கு அருகில் வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபடுவது போல பிராங்க் செய்த இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


தஜிகிஸ்தானைச் சேர்ந்த ருஸ்லானி முரோத்ஜான்ஸோடாவும் அவருடன் அனஸ்டாசியா கிஸ்டோவா ஆகியோர் ரஷ்யாவின் சிவப்பு சதுக்கத்திற்கு அருகில் உள்ள செயிண்ட் பேசில் காதட்ரல் தேவாலயத்திற்கு அருகில் பிராங்க் செய்வதற்காக மேற்கொண்ட முயற்சிகள் இருவரையும் சிறையில் அடைக்கச் செய்துள்ளது. 


உலகப் புகழ்பெற்ற தேவாலயமான செயிண்ட் பேசில் காதட்ரலுக்கு முன் நின்றுகொண்டு, ருஸ்லானி முரோத்ஜான்ஸோடாவின் முன் மண்டியிட்டு அனஸ்டாசியா கிஸ்டோவா வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபடுவது போல அப்பகுதியில் சென்று கொண்டிருந்த மக்களிடம் பிராங்க் செய்துகொண்டிருந்தனர். 



செயிண்ட் பேசில் காதட்ரல்


 


இது குற்ற நடவடிக்கை எனக் கருதப்பட்டதால், மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதால் மாஸ்கோ நீதிமன்றம் இருவருக்கும் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. எனினும் இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளனர். வழக்கில் தண்டனை அனுபவித்த பிறகு, ருஸ்லானி முரோத்ஜான்ஸோடா தனது சொந்த நாடான தஜிகிஸ்தானுக்கு நாடு கடத்தப்படவுள்ளார். 


இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவரும் மேற்கொண்ட நடவடிக்கைகள் சமூகத்தின் மீதான அவமரியாதை எனக் கூறியுள்ளனர். ருஸ்லானி முரோத்ஜான்ஸோடா ரஷ்யாவில் பிராங்க் செய்து பிரபலமாக அறியப்பட்டவர். அவரது காதலியான அனஸ்டாசியா கிஸ்டோவா இன்ஸ்டாகிராம் மாடலாக இருக்கிறார். 


வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பு, அனஸ்டாசியா கிஸ்டோவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். `நான் இதுகுறித்து சிந்திக்கவில்லை. லைக்ஸ் பெறுவதற்காகவும், பிரபலமாவதற்காகவும் விளையாட்டாக அவ்வாறு செய்தோம்’ என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து அவர், `எனினும் நான் சட்டத்திற்கும், மக்களுக்கும், எனது பெற்றோரின் மறுப்புக்கும், எனக்கு நெருக்கமானவர்களின் எதிர்ப்புக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும். நான் இதனால் காயப்பட்டுள்ளேன்’ என்று கூறியுள்ளார். 



ருஸ்லானி முரோத்ஜான்ஸோடா


 


மேலும் அவர் தனது காதலன் ருஸ்லானி முரோத்ஜான்ஸோடா அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கு பிராங்க் செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். `நான் அவனை ஒரு நாயைப் போல பின் தொடர்ந்தேன்’ என்றும் அனஸ்டாசியா கிஸ்டோவா கூறியுள்ளார். 


வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன், இருவரும் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் புதிய சட்டங்களின் படி, முதல்முறையாக மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக சிறைத் தண்டனை பெற்றவர்கள் இந்த இருவர் ஆவர். பழைய சட்டங்களில் இந்தக் குற்றத்திற்காக அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


சுமார் 1 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்ட ருஸ்லானி முரோத்ஜான்ஸோடா இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை எனக் கூறியுள்ளார்.