100-க்கு அழைத்து: பீர் கேட்ட கதை
100-க்கு அழைத்து காவல்துறையிடம் பீர் கேட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 பீர் வேண்டும்:
தெலுங்கானா விகர்பாத் மாவாட்டம் கோகா ஃபசல்பாத் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் தினமும் இரவு மது அருந்து வழக்கத்தை கொண்டுள்ளார்.சில தினங்களுக்கு முன்பு வேலைக்குச் சென்று இரவு மது அருந்தியிருக்கிறார். அப்போது மது அவருக்கு போதுமானதாக இல்லாத காரணத்தாலும், இரவு நேரம் என்பதால் மது கடைகள் மூடப்பட்டு இருந்ததாலும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.அப்போது என்ன செய்வதென்று தெரியாது 100-க்கு அழைத்து காவல்துறைக்கு தொடர்பு கொண்டுள்ளார். காவல்துறையிடம் பேசிய இளைஞர் தான் மிகுந்த வருத்தத்தில் உள்ளதாகவும், தனக்கு 2 பீர் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இளைஞர் கைது:
அவரிடம் வீட்டு முகவரி உளிட்ட அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொண்ட காவல்துறை அவரின் வீட்டுக்கு சென்றது. அப்போது போதையில் இருந்து இளைஞர் தனக்கு 2 பீர் வேண்டும் என்று காவல்துறையிடம் கேட்டுள்ளார். மேலும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவல்துறை, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க:விளாத்திகுளம்: வீட்டில் வைத்து மது குடித்த மகன் - தட்டிக்கேட்ட தந்தை உயிரிழப்பு
காவல்துறை எச்சரிக்கை:
இச்சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் முதல் முறை நிகழவில்லை. இந்த மாதத்திலே காவல்துறையினருக்கு மேலும் ஒருவர், இதே போன்று அழைத்து, அவரின் மனைவி மாமிசம் சமைத்து தர மறுக்கிறார் என புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காவல்துறை, காவல்துறையினரின் நேரத்தை தவறுதலாக வீணாக்க வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Also Read: Madurai : விபத்துக்குள்ளான டாஸ்மாக் மினி வேன்...!சாலையில் ஆறாக ஓடிய மது...!
Also Read:கல்லூரி மாணவர்களுடன் மது போதையில் ரகளை - தூத்துக்குடியில் தலைத்தூக்கும் அரிவாள் கலாச்சாரம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்