வன விலங்குகளுக்கு எப்போதும் சண்டை வந்தால் அதை பார்ப்பது நமக்கு மிகவும் பதற்றமாக இருக்கும். அப்படி ஒரு பதற்றமான வீடியோ ஒன்று தான் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இந்த முறை தன்னைவிட சக்தி வாய்ந்த மிருகத்தை நாய் ஒன்று தன்னுடைய தன்னம்பிக்கையால் பின்வாங்க செய்துள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்த சம்பவம் தொடர்பாக இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், வனப்பகுதியில் சிங்கம் ஒன்று தனியாக இருக்கும் நாய் ஒன்றை நெருங்க முற்படுகிறது. அந்த சமயத்தில் சிங்கத்தை பார்த்து சற்றும் பயப்படாத அந்த நாய் அதிக துணிச்சலுடன் அந்த சிங்கத்தை பின் வாங்க வைக்கிறது. அதன்பின்னர் அந்த நாய் சிங்கத்திடம் இருந்து சற்று தள்ளி வருகிறது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை தற்போது வரை 30 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். 






அத்துடன் பலரும் அந்த நாயின் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக பலர் நாய்க்கு ஒருநாள் வரும் (this is called Dogs day)என்ற ஆங்கில வாசகத்தை சுட்டி காட்டு வருகின்றனர். மேலும் பலர் இதை தான் நாம் ஒரு வாழ்க்கை பாடமாக கற்று கொள்ளவேண்டும். உடலளவில் நாம் சிறியதாக இருந்தாலும் மனதளவில் பெரியதாக நினைத்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று பதிவிட்டு வருகின்றனர். 


























இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க: மக்களின் அன்புக்குரிய ’அப்பு’ என்னும் ’புனீத் ராஜ்குமார்’.. யார் இவர்?