துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கரை வேட்பாளராக பாஜக சனிக்கிழமை முன்மொழிந்தது. பாஜகவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணைத் தலைவர் வேட்பாளராக 71 வயதான ஜக்தீப் தன்கர் பெயரை அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா அறிவித்தார்.  அதேபோல, குடியரசு துணை தலைவருக்கான எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார். 



துணை குடியரசு தலைவர் தேர்தல் எப்போது?


இந்திய துணை குடியரசு தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை ஜூலை 5-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆகஸ்ட் 6-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், ஜூலை 19-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகவும் அறிவித்துள்ளது. தற்போதைய துணை குடியரசு தலைவர் எம்.வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Vice President candidate: பாஜக கூட்டணியின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக ஜகதீப் தங்கர் அறிவிப்பு..


யார் அடுத்த துணை குடியரசு தலைவர்?


துணை குடியரசு தலைவர் தேர்தலில், ராஜ்யசபா மற்றும் லோக்சபா உறுப்பினர்கள் நாட்டின் துணை குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கின்றனர். நாடாளுமன்றத்தின் தற்போதைய பலம் 780, இதில் பாஜகவுக்கு 394 எம்பிக்கள் உள்ளனர். வெற்றி பெற 390 வாக்குகள் மட்டுமே தேவை என்பதால், நாட்டின் அடுத்த துணை குடியரசு தலைவராக ஜக்தீப் தன்கர் பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.



சம்பளமே கிடையாதா!


நாட்டின் துணை குடியரசு தலைவரின் சம்பளம் 'பாராளுமன்ற அதிகாரிகளின் சம்பளம் மற்றும் படிகள் சட்டம், 1953' இன் கீழ் தீர்மானிக்கப்படுகிறது. அடிப்படையில் துணை குடியரசு தலைவருக்கு சம்பளம் கிடையாது. துணை குடியரசு தலைவர் ராஜ்யசபா தலைவராகவும் இருப்பதால், சபாநாயகரின் சம்பளம் மற்றும் வசதிகள் அவருக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்: குடியரசுத் தலைவர் தேர்தல்: யஷ்வந்த் சின்ஹா மனுவை வாபஸ் பெற அம்பேத்கர் பேரன் வலியுறுத்தல்.. ஏன்?


சபாநாயகராக என்னென்ன வசதிகள்?


துணை குடியரசு தலைவர் சபாநாயகராக ஒவ்வொரு மாதமும் ரூ.4 லட்சம் சம்பளம் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர, பல வகையான அலவன்ஸ்களும் பெறுகின்றார். துணை குடியரசு தலைவர் தினசரி அலவன்ஸ், இலவச வீடு, இப்பவச மருத்துவ வசதி, இலவச பயணம் மற்றும் பிற வசதிகளை பெறுகிறார். துணை குடியரசு தலைவருக்கான ஓய்வூதியம் சம்பளத்தில் 50% கொடுக்கப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.