இந்திய ரயில்வே துறை திடீரென 200க்கும் மேற்பட்ட ரயில்களை கனமழை,  பாதை பராமரிப்பு மற்றும் போராட்டங்கள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக ரத்து செய்துள்ளது. 


இந்திய ரயில்வே துறை இன்று(17/072022) அறிவித்துள்ள அறிவிப்பின்படி, நாடு முழுவதும் கனமழை,  பாதை பராமரிப்பு மற்றும் போராட்டங்கள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக 246 ரயில்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், நாட்டின் சில மாநிலங்களில் பராமரிப்பு மற்றும் கனமழை காரணமாக ரயில் இயக்கங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அக்னிபாத் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு எதிராக செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இன்று நடந்த போராட்டம் காரணமாக, பல பயணிகள் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக IRCTC குறிப்பிட்டுள்ளது.


மேலும், இந்திய ரயில்வேயின் மத்திய இரயில்வே மற்றும் மேற்கு இரயில்வேயின் பராமரிப்பு மற்றும் இதர கட்டுமானப் பணிகள் மும்பையில் இன்று நடைபெறுகின்றன. இருப்பினும், தடையின் போது பன்வெல் மற்றும் குர்லாவிலிருந்து சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், டெல்லி-என்சிஆர் பகுதியில் இன்று கனமழை பெய்து வருவதால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.


மேலும், இன்று செர்லபள்ளி ரயில் நிலையம் மற்றும் பிற நிலையங்களில் இருந்து  செகந்திராபாத் ரயில் நிலையத்திற்குள்  வந்து செல்லும்  ரயில்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. அக்னிபாத் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு எதிராக செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இன்று நடந்த போராட்டம் காரணமாக கூடுதல் ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) மற்றும் அரசு ரயில்வே போலீஸார் செகந்திராபாத் நிலையத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  மேற்கூறிய காரணங்களால் பல ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டன. எனினும், ரயில் சேவையை விரைவில் தொடங்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் எனவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 




ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விபரம், 


01539 புனே-சதாரா DMU
01605 பதான்கோட்-ஜ்வாலாமுகி
01607 பதான்கோட்-பைஜ்நாத் பப்ரோலா
03085 அசிம்கஞ்ச் ஜே.என்.-நல்ஹாட்டி ஜே.என்.
05364 கத்கோடம்-மொராதாபாத், 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண