தீபாவளி பண்டிகைக்கு அரசு அறிவிக்கும் சலுகைகள் பெற தடுப்பூசி சான்றிழ் கட்டாயம் தேவை என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். இந்திய விமானப் படையின் சார்பில் பாகிஸ்தானை எதிர்த்து 1971ஆம் ஆண்டு வெற்றி பெற்ற 50 ஆம் ஆண்டு விழா, 75 ஆவது குடியரசு தின விழாவை கொண்டாடும் வகையிலும், தடுப்பூசியை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக நாளொன்றுக்கு 100 கிலோ மீட்டர் தொலைவு சைக்கிள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய விமானப் படை வீரர்களை ஆளுநர் மாளிகையில் இருந்து ஆளுநர் தமிழிசை இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
Surya's 2D Entertainment: ரம்யா பாண்டியனிடம் சூர்யா சொன்னது!
ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் நூறு சதவீத தடுப்பூசி போட திட்டமிட்டோம். அது இயலவில்லை. அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் இந்த இலக்கை எட்ட திட்டமிட்டுள்ளோம். தடுப்பூசி போடுவது தொடர்பாக எம்எல்ஏக்களுக்குக் கடிதம் எழுதுகிறேன். அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி போடுவதை முழுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் மருத்துவக் குழுவைக் கொடுத்து தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்த ஏற்பாடு செய்துள்ளேன். ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் விடுபட்டோர் பெயரைக் கணக்கெடுத்து அவர்களுக்குத் தடுப்பூசி போட ஏற்பாடு செய்துள்ளோம்.
Bigg Boss 5 Tamil: பிக்பாஸ்ல கலந்துக்குற ஐடியா இல்ல -விஜே பிரியங்கா
முழு தடுப்பூசி போட்ட மாநிலமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். விடுபட்டோர் தாமாக முன்வந்து தடுப்பூசி போடவேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அரசு சலுகைகள், மாணவர்கள் தேர்வு எழுதுவது தொடங்கி தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் இல்லையென்றால் அரசின் நலத்திட்டங்கள் போன்றவை கிடைப்பதற்கு இனி கடுமையான பாதிப்பு ஏற்படும். அரசு ஊழியர்கள் ஊதியம் பெற தடுப்பூசி அவசியம் என்பதை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
அதே போல் மாணவர்கள் தேர்வு எழுத தடுப்பூசி அவசியம். தீபாவளி பண்டிகைக்கு சலுகை அறிவித்தால் அதைப் பெற தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் தேவை. இன்னும் 35 சதவீதம் பேர் தடுப்பூசி போடவில்லை. அதனால் தடுப்பூசி போடாமல் விடுபட்டோர் வீடு வீடாக கணக்கெடுக்கப்பட உள்ளனர். குறிப்பாக ஓய்வூதியர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போடாமல் இருப்போர் விவரங்களைக் கணக்கெடுப்பில் முன்னுரிமை தந்து சேகரிக்க உள்ளோம். மேலும் வெளி ஊரில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வருவோர் தடுப்பூசி சான்றிதழை கேட்க சொல்லியுள்ளோம் என துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
Aazhi Senthilnathan Interview: மேடைல கத்தறதா தமிழ்த்தேசியம்? அண்ணாகிட்ட கேளுங்க!
Jayakumar Pressmeet: ”சேப்பாக்கம் சேகுவேராவ காணோமே” - உதயநிதியை கலாய்த்த ஜெயக்குமார்