Jayakumar Pressmeet: ”சேப்பாக்கம் சேகுவேராவ காணோமே” - உதயநிதியை கலாய்த்த ஜெயக்குமார்

Continues below advertisement

Jayakumar Pressmeet:  சென்னை அண்ணாசாலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதால் இழப்பு பாமவிற்குத்தான். யாருடைய கட்டாயத்தின் பேரில் தனித்துப்போட்டி என முடிவெடுத்தார்கள் என தெரியவில்லை. பாமக முடிவெடுக்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அதிமுகவை விமர்சிக்க அவர்களுக்கு உரிமையில்லை. அதிமுகவின் உட்கட்சி விவகாரம் பற்றி பாமக பேச வேண்டிய அவசியமில்லை” என்றார். மேலும், ”தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்றும், இதன் தாக்கம் உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கும் என்ற அவர், உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டப்பேரவை போரடித்துவிட்டது, சேப்பாக்கம் சேகுவேராவை எங்கே எனத் தெரியவில்லை” என்றும் கூறினார்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram