Just In




'இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், முஸ்லிம்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்': யோகி ஆதித்யநாத்
2017 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து உத்தரபிரதேசத்தில் எந்த வகுப்புவாத கலவரமும் நடக்கவில்லை என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து உத்தரபிரதேசத்தில் எந்த வகுப்புவாத கலவரமும் நடக்கவில்லை என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் முஸ்லிம்களும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "நான் ஒரு யோகி. 100 இந்து குடும்பங்களில் ஒரு முஸ்லிம் குடும்பம்தான் மிகவும் பாதுகாப்பானது" என்றார்.
“அவர்களுக்கு அனைத்து மத பழக்கவழக்கங்களையும் பின்பற்ற சுதந்திரம் இருக்கும். ஆனால் 100 முஸ்லிம் குடும்பங்களில் 50 இந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா? வங்கதேசம் ஒரு உதாரணம்.
இதற்கு முன்பு, பாகிஸ்தான் ஒரு உதாரணமாக இருந்தது. ஆப்கானிஸ்தானில் என்ன நடந்தது? யாராவது தாக்கப்பட்டால், நாம் தாக்கப்படுவதற்கு முன்பு கவனமாக இருக்க வேண்டும். அதைத்தான் கவனித்துக் கொள்ள வேண்டும்.
2017 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து உத்தரபிரதேசத்தில் எந்த வகுப்புவாத கலவரமும் நடக்கவில்லை. 2017 ஆம் ஆண்டுக்கு முன் இந்து கடைகள் எரிந்தால் முஸ்லிம் கடைகளும் எரிந்துள்ளன. இந்து வீடுகள் எரிந்தால் முஸ்லீம் வீடுகளும் எரிந்துள்ளன.
நான் ஒரு சாதாரண குடிமகன், உத்தரபிரதேச குடிமகன். நான் அனைவரின் மகிழ்ச்சியையும் விரும்பும் ஒரு யோகி. அனைவரின் ஆதரவையும் வளர்ச்சியையும் நான் நம்புகிறேன். சனாதன தர்மம் உலகின் மிகப் பழமையான மதம்.
உலக வரலாற்றில் இந்து ஆட்சியாளர்கள் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியதற்கான உதாரணங்கள் எதுவும் இல்லை. சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் மற்றவர்களை தங்கள் மதத்திற்கு மாற்றவில்லை” எனத் தெரிவித்தார்.