சென்னை மெட்ரோ ரயிலின் 2 புதிய வழித்தடத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் ஏற்கெனவே 2 வழித்தடங்களில் ரயில்கள் இயங்கி வருகின்றன. இரண்டாம் கட்டமாக 3 வழித்தடங்களில் விறுவிறுப்பாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதைனிடையே தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரை 21 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய வழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் கலங்கரை விளக்கம் முதல் உயர்நீதிமன்றம் வரை புதிய வழித்தடத்துக்கு விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்கு திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது.

புதிய வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர் விட்டுள்ளது. இதனிடையே 3 வழித்தடங்களில் மித அதிவேக ரயில் சேவைக்கான டெண்டரை மெட்ரோ ரயில் நிர்வாகம் விட்டுள்ளது.

2025ஆம் ஆண்டின் தமிழக அரசின் பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில், மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் மித அதிவேக ரெயில்வே சேவையை சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் - விழுப்புரம் வரை 167 கி.மீட்டக்கும் சென்னை – காஞ்சி – வேலூர் வரை 140 கி.மீட்டருக்கும் கோவை – திருப்பூர் – ஈரோடு – சேலம் வரை 185 கி.மீட்டருக்கும் வழித்தடங்கள் உருவாக்கிட தேவையான விரிவான சாத்திய கூறுகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, 3 வழித்தடங்களில், மித அதிவேக ரெயில் சேவையை (RRTS) உருவாக்கிட, விரிவான சாத்தியக் கூறு அறிக்கையை தயார் செய்வதற்கான டெண்டரை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.