UP election : ஒரே ஒரு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்.... உதயமான கேங் வார்... அதகளமாகும் உத்திரப்பிரதேச தேர்தல்...!

நொய்டா செக்டார் பகுதியில் வசிக்கும் 22 வயதான வீரேந்திர சவுத்ரி என்பவர் வாக்குப்பதிவுக்கு முன்பு ஒரு குறிப்பிட்டஅரசியல் கட்சிக்கு ஆதரவாக தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்துள்ளார்.

Continues below advertisement

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி நடைபெற்றபோது, ​​இரு குழுக்களிடையே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் தொடர்பான வாக்குவாதம் தீவிரமடைந்து மோதல் ஏற்பட்டதில் இருவர் படுகாயமடைந்தனர். 

Continues below advertisement


இதுகுறித்து நொய்டா காவல்துறை அளித்த முதற்கட்ட அறிக்கையில், நொய்டா செக்டார் பகுதியில் வசிக்கும் 22 வயதான வீரேந்திர சவுத்ரி என்பவர் வாக்குப்பதிவுக்கு முன்பு ஒரு குறிப்பிட்டஅரசியல் கட்சிக்கு ஆதரவாக தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்துள்ளார். சவுத்ரியின் வாட்ஸ்அப் நண்பரான 24 வயதான சலீம் பாஷா அந்த ஸ்டேட்டஸ் வைத்ததை விரும்பவில்லை. தொடர்ந்து, சலீம் அவரது ஸ்டேட்டஸ் தொடர்பாக எதிர் கருத்து ஒன்றையும் கருத்தையும் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க : Watch video : தண்ணீரை பார்த்து தடுமாறிய குட்டியானை.. கம்பீரமாக வழிகாட்டிய தாய் யானை! வைரல் வீடியோ

இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தீவிரமடைந்தது, சவுத்ரி தனது மூன்று நண்பர்களுடன் மற்றும் பாஷா தனது 7-8 நண்பர்களுடன் காஜியாபாத்தில் சந்திக்க திட்டமிட்டனர். இந்நிலையில் இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் வன்முறையாக மாறி, கடுமையான உடல் ரீதியான மோதலை ஏற்படுத்தியது. சவுத்ரி மற்றும் அவரது நண்பர் ரவி தாக்கூர் (23) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். 

என்னதான் ஆச்சு நம்ம CSK- வுக்கு .. ரசிகர்களை கண்கலங்க வைக்கும் 2022 ஐபிஎல் ஏலம் !

சம்பவத்தை தொடர்ந்து, பாஷா மற்றும் அவரது நண்பர்கள் அஃப்ரோஸ், ராஜா அகமது, ஷதாப் கான், அமன் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் பலத்த காயமடைந்த சவுத்ரி காவல்துறையினருக்கு அளித்த புகாரின் அடிப்படையில், பாஷா மற்றும் ஏழு பேர் மீது ஐபிசி மற்றும் ஐடி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

தகாத உறவில் தகராறு: போடி பெண் வனக்காவலர் கழுத்தை நெரித்து கொலை: ஆயுதப்படை காவலர் போலீசில் சரண்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Bank Fraud Cases India: ஏ.ஜி.பி. நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க 5 ஆண்டுகள் ஆகியது ஏன்? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

Continues below advertisement
Sponsored Links by Taboola