மதுரை சதாசிவம் நகர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பொன்பாண்டி மனைவி சரண்யா (27). இவர் தேனி வனச்சரக அலுவலகத்தில் வனக்காவலராக பணிபுரிந்து வருகிறார். போடியில் வனத்துறை அலுவலகம் அருகே ரமேஷ் என்பவரது வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் நான்கு வருடம் முன்பு இவரது கணவர் சாலை விபத்தில் இறந்து விட்டார். இரண்டு குழந்தைகளும் சரண்யாவின் பெற்றோர் வீட்டில் உள்ளனர்.
Local body election | இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவுக்கு வெற்றிதான் - ஓபிஎஸ் ஆருடம்
Local Body Election 2022: ’நாங்க வாரிசு அரசியல் செய்யமாட்டோம்’ - திருநங்கை வேட்பாளர் பேச்சு..
சனிக்கிழமை இரவிலும் திருமுருகன் வழக்கம்போல் வந்துள்ளார். அவர்களுக்குள் திருமணம் செய்வது தொடர்பாக பேசியபோது இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில் திருமுருகன் சரண்யாவை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். திருமுருகன் மதுரை ஆயுதப்படை காவல் பிரிவில் சிறப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போடி நகர் காவல் நிலைய போலீஸார் திருமுருகன் கைது செய்ய மதுரை விரைந்துள்ளனர். சம்பவ இடத்தில் காவல்துறை மோப்ப நாய் மூலம் விசாரணை செய்ததில் கொலை நடந்த வீட்டிலிருந்து ஓடிய நாய் போடி பேருந்து நிலையம் வரை சென்றது. மேலும் கைரேகை நிபுணர்களும் கைரேகை தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்