மனைவி வேண்டாம் மாமியார் தான் வேண்டும்; ஊரை எதிர்த்து திருமணம் செய்த ஜோடி கைது!

மருமகன் மீது காதல் வயப்பட்டு அவருடன் ஓடிய மாமியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.ஊருக்கு பயந்து ஓடிய அந்த ஜோடி, மீண்டும் திரும்பிய போது கைது!

Continues below advertisement

ஒருவர் மீது மற்றொருவருக்கு காதல் வருவது இயல்பான ஒன்று தான். அப்படி காதல் வந்தால் அதற்கான காரணம் என்ன வென்று தெளிவாக கூற முடியாது. பெரியவருக்கு சிறியவர் மீது காதல் வரலாம். அப்படி வந்த ஒரு சிக்கலான காதல் கடைசியில் கைதில் முடிவடைந்துள்ளது. அப்படி கைது வரை செல்ல காரணம் என்ன?

Continues below advertisement

உத்தரபிரதேசம் மாநிலத்தின் முசாஃபர் நகரில் 25 வயது மதிக்க தக்க நபர் திருமணமாகி தனது மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் இவருக்கும் அவருடைய மனைவியின் தாய்க்கும்(அதாவது மாமியார்) காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் மனம் ஒத்து சேர்த்து தனிமையில் வாழ்வும் செய்துள்ளனர். 50 வயது மாமியரை  25 மருமகன் காதலிப்பது தெரிந்தால் பிரச்னையாகும் என்று இவர்கள் நினைத்துள்ளனர். இதன் காரணமாக தங்கள் வீட்டை விட்டு ஓடி வெறு பகுதியில் வசிக்க திட்டமிட்டுள்ளனர். 


இதற்காக 10 மாதங்களுக்கு முன்பாக இந்த காதல் ஜோடி தங்களது வீட்டை விட்டு வெளியேறியுள்ளது. அதன்பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் இந்த காதல் ஜோடி நேற்று திடீரென தங்களுடைய வீட்டிற்கு திரும்பியுள்ளது. அப்போது அந்தப் பகுதியில் பெரிய பிரச்னை வெடித்துள்ளது. இந்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அந்த தம்பதி இருவரையும் கைது செய்துள்ளனர். 

சிஆர்பிசியின் பிரிவு 151-ன்படி ஒருவரை எந்தவித புகார் மற்றும் பிடிவாரண்ட் இல்லாமல் கைது செய்யவேண்டும். அதற்கு அந்த நபரால் அப்பகுதியில் பெரியளவில் பிரச்னை ஏற்படும் சூழல் உருவாக வேண்டும். அப்போது அவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் கைது செய்யலாம். அந்தப் பிரிவின் கீழ் இந்த காதல் ஜோடியை காவல்துறையினர் கைது செய்தனர். 


அதன்பின்னர் நடத்திய விசாரணையில் இந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. அத்துடன் இந்த திருமணத்தை அவர்கள் பதிவும் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று குடும்பத்தினரிடம் கூறிய தாக தெரிகிறது. இதனால்  இருவரையும் அப்பகுதியினர் கடுமையாக தாக்க முற்பட்டுள்ளனர். இந்தச் சூழலை கட்டுபடுத்தவே அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பார்கள். அந்த வாக்கியத்திற்கு ஏற்ப இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்று தற்போது மீண்டும் திரும்பி வந்துள்ளனர். அத்துடன் அவர்கள் தங்களது திருமணத்தை நியாயப்படுத்தியும் உள்ளதாக கூறப்படுகிறது. காதல் என்பது எந்தவித உறவும் பார்த்து வருவதல்ல. ஆனால் இந்த மாதிரி முறையற்று வரும் காதலால் குடும்பத்தில் பெரியளவில் பிரச்னை வெடிக்கும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது. 

மேலும் படிக்க: நாயை அடித்து கொன்ற விவகாரம்; கேரளாவில் களேபரம்

Continues below advertisement
Sponsored Links by Taboola