திருவனந்தபுரம் - அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதத்தில் இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு இளைஞர் ஒரு நாயை அடித்து துன்புறுத்தி கொன்றுள்ளனர். அடிமலதுராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நாயின் உரிமையாளர் கிறித்துராஜ் அவர்கள் நாயின் இந்த கொடுமையான வீடியோவை பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டதால், அனைவர்க்கும் தெரிய வந்துள்ளது.


கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கபட்டு இருந்த படகில், நாயை கயிறால் கட்டி போட்டு குச்சியால் மூவரும் சேர்ந்து அடித்துள்ளனர். திங்கள் கிழமை காலை இந்த நிகழ்வு நடந்துள்ளது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் நிலைய அதிகாரி விழிஞம் பகுதி போலீஸ் நிலையத்தில், விலங்குகள் மீதான கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து உள்ளது. இதில் ஈடுபட்டவர்கள், அனைவரும் 18 வயதிற்கு குறைவாக இருப்பதால் யாரையும் இன்னும் கைது செய்யவில்லை என தெரிய வந்துள்ளது


கருப்பு லாப்ரடார் என்ற இனத்தை சேர்ந்த நாயானது, புருனோ என பெயரிட்டு 8 வருடமாக வளர்த்து வந்துள்ளனர். கிறிஸ்துராஜ் மற்றும் அவரது உடன் பிறந்தவர்கள் எட்டு பேர் சேர்ந்து இதை வளர்த்துள்ளனர். சோனி, கிறிஸ்துராஜ் அவர்களின் சகோதரி இந்த வழக்கை பதிவு செய்து உள்ளார். இது எங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தி உள்ளதாக , எங்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளதாகவும் கூறுகிறார். இது எங்களுடன் 8 வருடம் இருந்தது. எங்கள் குடும்பத்தில் ஒருவராக வளர்ந்து வந்தது. எங்கள் அனைவர் வீட்டிலும், சாப்பிடும்.


மார்ட்டின் அவர்கள் கூறுகையில், இந்த ப்ருனோவை நான் ஒரு வயதாக இருக்கும் போது எங்கள்  வீட்டிற்க்கு அழைத்து வந்தோம்.  இந்த ஊரடங்கு முடிந்தவுடன் இதில் போல் இன்னொரு நாயை வளர்க்க நாங்கள் திட்டமிட்டு இருந்தோம். திங்கள் கிழமை காலை நாய் தொலைந்து போன உடன் நாங்கள் ஆளுக்கொரு பக்கம் தேடும் முயற்சியில் இருந்தோம். அண்ட்ரியூ , சோனியின் மைத்துனன் அவர்கள் இந்த நாய் கடற்கரையில் பார்த்தார். அப்போதும் அந்த நாயானது கொடுமை படுத்தி தூக்கி எரிந்து கொண்டு இருந்த நிகழ்வை கண்டார்.


இதை பார்த்து செவ்வாய்க்கிழமை போலீஸ் நிலையத்தில் கேஸ் கொடுத்ததும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலும் சோனி அவர்கள் கூறுகையில், அவர்கள் நாயை கடற்கரை ஓரமாக புதைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதை அடுத்து கடலோர காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும், எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதனால் நாங்கள் அதை வீடியோ ஆகா எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து எங்கள் புருனோ விருக்கு நடந்த கொடுமையை சொன்னோம்.


போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த பிறகு, அந்த இளைஞர்கள் வீட்டிற்கு வந்து இரும்பு கம்பிக்கைளை கொண்டு வந்து வீட்டில் இருப்பவர்களை மிரட்டி சென்றுள்ளனர்.