சமூக வலைதளங்களில் பொதுவாக எந்த வீடியோ எப்போது வைரலாகும் என்று யாராலும் கண்டறிய முடியாது. அந்தவகையில் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கார் ஒன்று வெள்ளம் சூழந்த பகுதியில் செல்வது போல ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. 


இந்த வீடியோவின் படி இந்த கார் ஐஸ்லாந்து பகுதியில் உள்ள சாலையில் வெள்ளம் தேங்கி இருந்தப் போது ஓடியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை இதுவரை 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். அத்துடன் பலரும் இதற்கு கமெண்ட்ஸை பதிவு செய்து வருகின்றனர். 


 






குறிப்பாக ஒருவர், “இந்தியாவில் இது ஒவ்வொரு மழை காலத்திலும் சர்வ சாதரணமாக இந்தியாவில் நடக்கும் சம்பவம்” எனப் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “இவர்கள் வேளச்சேரி மற்றும் முடிச்சூர் பகுதிகளை மழை காலங்களில் பார்த்தில்லை போல” எனக் கிண்டலாக பதிவு செய்துள்ளார். 






மேலும் ஒருவர் இது ஐஸ்லாந்தில் சர்வ சாதாரணமாக நடக்கும் காட்சி என்றும் பதிவிட்டுள்ளார்.  ஏனென்றால் ஐஸ்லாந்து பகுதியில் பருவநிலை மாற்றம் காரணமாக சமீபத்தில் அதிகமாக பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டு அந்தப் பகுதிகளில் அதிகமாக வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அங்கு உள்ள சாலைகளில் அவ்வப்போது வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி இருப்பது வாடிக்கையாக உள்ளது. 


 






 






இப்படி இந்த வீடியோவிற்கு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவில் பெரும்பாலும் பருவமழை காலங்களில் முக்கிய நகரங்களான மும்பை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அப்போது அதில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவார்கள். அதேபோல வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னையின் சாலைகள் மிகவும் மோசமாக வெள்ள நீர் சூழப்பட்ட கடற்பகுதி போல் காணப்படும். குறிப்பாக வேளச்சேரி, முடிச்சூர் போன்ற பகுதிகள் மிகவும் அதிகமாக மழை நீர் சூழ்ந்து காணப்படுவது வழக்கம்.  


மேலும் படிக்க:27 முறை தரையில் தூக்கி அடிக்கப்பட்ட , தைவான் ஜூடோ சிறுவன் மரணம் : என்ன நடந்தது?