BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
பாஜகவின் புதிய தேசியத்தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த பட்டியலில் மூன்று பெண் தலைவர்கள் பெயர் இடம்பெற்றுள்ளாதாக சொல்கின்றனர். அந்த வகையில் தமிழ் நாட்டைச் சேர்ந்த நிர்மாலா சீதாராமன் மற்றும் வானதி சீனுவாசன் ஆகியோருக்கும் வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு பாஜகவின் தேசியத்தலைவராக நியமிக்கப்பட்டவர் ஜே.பி. நட்டா. பாஜகவில் தேசியத்தலைவாரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் என்ற அடிப்படையில் இவரது பதவிக்காலம் கடந்த 2023 ஆம் ஆண்டே முடிவடைந்தது. அதே நேரம் 2024-ல் நாடாளுமன்ற தேர்தல் வந்ததால் இவரை மாற்றாமல் பதவி நீட்டிப்பு செய்தது பாஜக. இதனைத்தொடர்ந்து மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற்றார் ஜே.பி. நட்டா.
இச்சூழலில் தான் பாஜகவின் அடுத்த தலைவராக யார் என்ற கேள்வி எழுந்தது. பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜகவின் மூத்தலைவர்கள் இது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து தொடர்ந்து பேசி வரும் மோடி இந்த முறை பெண் ஒருவரை பாஜகவின் தலைமைப் பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக சொல்லப்படுகிறதே. ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இது தொடர்பான ஆலோசனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் பாஜகவின் தேசியத் தலைவராக பெண் ஒருவர் நியமிக்கபடுவதாக இருந்தால் அந்த லிஸ்டல் மூன்று பேருக்கு வாய்ப்புள்ளதாக சொல்கின்றனர். அதாவது, தமிழ் நாட்டைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மற்றும் ஆந்திய மாநில முன்னாள் முதலமைச்சர் ராமாராவின் மகள் எம்.பி. புரந்தேஷ்வரி ஆகியோர் இந்த லிஸ்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ் நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டு நிர்மலா சீதாராமன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோரில் ஒருவருக்கு தேசிய தலைவர் பொறுப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழக பாஜக தொண்டர்களிடம் நிலவுகிறது