- அக்கா போட்ட ஃபோன் கால் - மருத்துவமனைக்கு விரைந்த முதலமைச்சர் ஸ்டாலின்: துரை தயாநிதி எப்படி இருக்கிறார்?
வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில், உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியை முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன், சபரீசன் மற்றும் அமைச்சர் துரைமுருகன், எம்.எல்.ஏ நந்தகுமார், கார்த்திகேயன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சகோதரரான, மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல்நலக் குறைவு காரணமாக நீண்ட நாட்களாக உயர்தர மருத்துவச் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் படிக்க..
- தைரியம் இருந்தா காங்கிரஸிடம் இதை செய்யுங்கள்..! ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி சவால்
காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடாவின் அறிக்கை குறித்து, அக்கட்சியுடன் கூட்டணியில் உள்ள திமுகவிடம் பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மூன்றுகட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ளது. நான்காம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு, அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் தென்னிந்திய மக்களை காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா சொன்ன கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. தேசிஅய் அளவில் விவாத பொருளாகவும் மாறியுள்ளது. மேலும் படிக்க..
- தமிழ்நாட்டில் ஆவினுக்கு போட்டியாக களமிறங்குகிறதா அமுல்? பால்வளத்துறை சொன்ன பதில் இதுதான்!
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் அமுல் நிறுவனம் பால் விற்பனையை செய்து வருவதாக தகவல் வெளியான நிலையில் பால்வளத்துறை இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. தமிழக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனமான ஆவின் , பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து, பால், தயிர், நெய், இனிப்பு பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் விற்பனை செய்யவதாக தகவல் வெளியானது. சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் படிக்க..
- இந்தியாவில் அறிமுகமானது ‘கூகுள் வாலட்’! பயன்படுத்துவது எப்படி? முழு விவரம்
உலகெங்கும் இணைய பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கூகுள் வாலட் (Google Walle) ஆஃப் அறிமுகப்படுதப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் இந்தியாவில் ‘டிஜிட்டல் வாலெட்’ செயலியை ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.ஆனால், இதன் மூலம் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது. கூகுள் பே, கூகுள் வாலட் இரண்டும் வெவ்வேறு பயன்பாட்டிற்கானதாகும். அதன் விவரங்களை காணலாம். டிஜிட்டல் வடிவில் விமான பயணத்தின் போர்டிங் பாஸ், சினிமா டிக்கெட், பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது டிக்கெட் எடுக்க, கிஃப்ட் கார்டுகள், ப்ராண்ட் லாயல்டி கார்டு போன்றவற்றை இதில் சேமித்து வைக்கலாம். மேலும் படிக்க..
- மொத்தமாக திடீர் விடுப்பு எடுத்த ஊழியர்கள் - 25 பேரை வேலையை விட்டு நீக்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், தனது ஊழியர்களில் சுமார் 25 பேரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டாவது நாளாக வேலைக்கு வராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விடுப்பு எடுத்த ஊழியர்களின் நடத்தை காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 70 விமானங்களின் சேவை நேற்று பாதிக்கப்பட்டது. மேலும் படிக்க..