தமிழ்நாடு:



  • வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ் புதல்வன் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் - தலைமைச் செயலாளர்.

  • தமிழ்நாட்டில் 53,74,000 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பு - வேலைவாய்ப்புத்துறை.

  • தமிழ்நாட்டில் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.

  • தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் தற்போது வரை தனது பால் பண்ணையை அமைக்கவில்லை - பால்வளத்துறை.

  • 3 ஆண்டுகளாக எந்த திட்டமும் இல்லை என கூறும் பழனிசாமி செய்தி பார்ப்பதே கிடையாதா - திமுக கேள்வி.

  • உயர்கல்வி படிப்புகளுக்கு செல்லும் மாணவர்கள் 14417 என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம்.

  • தமிழ்நாட்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை.

  • கோடை மழையால் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்தது.

  • கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி மேற்கோள் காட்டிய ஆவணங்கள் அனைத்தும் பொய் - தமிழ்நாடு காங்கிரஸ்.

  • 2023- 2024ம் கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.

  • கன்னியாகுமரி தென்னிந்தியாவின் முதல் பாஜக எம்.எல்.ஏ சி.வேலாயுதம் காலமானார்.

  • வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது காரணமாக 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு.

  • உதகை மலர் கண்காட்சியை ஒட்டி நாளை நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. 


இந்தியா: 



  • காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் பதவியை சாம் பிட்ரோடா ராஜினாமா செய்தார். 

  • கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ராய்கஞ்ச் வரை 2,870 கி.மீ. தொலைவை 60 மணிநேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றர்.

  • பாலியல் வன்கொடுமை மற்றும் ஆள்கடத்தல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவண்ணாவுக்கு வரும் 14 தேதி வரை நீதிமன்ற காவல்

  • கேரளாவில் தனியார் தொலைக்காட்சி கேமராமேன், யானை மிதித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • ஏர் இந்தியா நிறுவனம் ஊழியர்கள் பற்றாக்குறையால் திடீரென 70 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.

  • மஹாராஷ்டிராவில் வாக்காளர் ஒருவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (இ.வி.எம்.) திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


உலகம்: 



  • லாவோக் கடற்கரையில் அமெரிக்கா - பிலிப்பைன்ஸ் ராணுவத்தினர் இணைந்து கூட்டு போர் பயிற்சி.

  • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்ய செய்ய சதி திட்டம் தீட்டிய விவகாரத்தில் 2 பேர் கைது.

  • இஸ்தான்புல் விமானநிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் முன்பகுதி ஓடுபாதையில் மோதியது.

  • பிரேசிலில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.

  • பாகிஸ்தான்:

  • பஞ்சாப் மாநிலத்தில் செயல்படும் நீதிமன்றங்களை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு.

  • கஞ்சாவை மீண்டும் சட்டவிரோத பட்டியலில் சேர்க்க தாய்லாந்து அரசு பரிசீலனை.

  • பாலஸ்தீன மக்களுக்கு ஆதரமாக ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

  • காஸா ராஃபா படையெடுப்பு விவகாரம்: இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்திய அமெரிக்கா.

  • இருதரப்பு நல்லுறவு ஒப்பந்தம் சீனாவுக்கும் செர்பியாவுக்கு இடையே கையொப்பமானது.

  • அமெரிக்கா: கடவுள் கொல்ல ஆணையிட்டதாகக் கூறி பாதிரியாரை கொலை செய்ய முயற்சி. 


விளையாட்டு: 



  • ஐபிஎல் 2024: இன்றைய போட்டியில் பெங்களூருவை எதிர்கொள்கிறது பஞ்சாப் கிங்ஸ்.

  • ஐபிஎல் 2024: நேற்றைய லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது ஹைதராபாத் அணி.

  • பெடரேஷன் கோப்பை தடகள போட்டியில் பங்கேற்கிறார் நீரஜ் சோப்ரா.