உலகெங்கும் இணைய பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கூகுள் வாலட் (Google Walle) ஆஃப் அறிமுகப்படுதப்பட்டுள்ளது.
கூகுள் வாலட்:
கூகுள் நிறுவனம் இந்தியாவில் ‘டிஜிட்டல் வாலெட்’ செயலியை ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.ஆனால், இதன் மூலம் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது. கூகுள் பே, கூகுள் வாலட் இரண்டும் வெவ்வேறு பயன்பாட்டிற்கானதாகும். அதன் விவரங்களை காணலாம்.
கூகுள் வாலட்:
டிஜிட்டல் வடிவில் விமான பயணத்தின் போர்டிங் பாஸ், சினிமா டிக்கெட், பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது டிக்கெட் எடுக்க, கிஃப்ட் கார்டுகள், ப்ராண்ட் லாயல்டி கார்டு போன்றவற்றை இதில் சேமித்து வைக்கலாம். சேமித்து வைக்கப்பட்ட முக்கியமானவை குறித்த நோட்டிபிகேஷனை நிகழ்நேரத்தில் இந்த செயலியில் பெற முடியும்.
என்னென்ன பயன்கள்?
- நீங்க சினிமா செல்ல திட்டமிட்டிருந்தால் அதற்கான் டிக்கெட்டை இதில் சேமித்து வைக்கலாம். தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தலாம்.
- விமான டிக்கெட்டுகளை இதில் சேமித்து வைக்கலாம். கூகுள் பிக்சல் ஸ்மார்ட்ஃபோன்களில் விமான போர்டிங் பாஸை ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து "Add to Google Wallet.” என்பதன் மூலம் எளிதாக இணைக்கலாம்.
- உங்களுக்கு கிடைக்கும் கிஃப்டி கார்டு, ஆஃபர் கூப்பன் உள்ளிட்டவற்றின் டிஜிட்டல் தரவுகளை இதில் ஸ்டோர் செய்யலாம்.
- பேருந்து, மெட்ரோ ரயில் டிஜிட்டல் டிக்கெட்களை இதில் வைத்துக்கொள்ளலாம்.
- ஐ.பி.எல். டிக்கெட், விமான டிக்கெட், சினிமா டிக்கெட், ரயில் டிக்கெட் உள்ளிட்டவற்றிற்கு பேமென்ட் முடிந்ததும் கூகுள் மெயிலுக்கு நோட்டிஃபிகேசன் அனுப்பப்படும்.
ப்ளே ஸ்டோரில் கூகுள் வாலட்
Android version 7.0-ன் கொண்டவர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ‘கூகுள் வாலட்’ தரவிறக்கம் செய்து கொள்ளலாம். கூகுள் அக்கவுண்ட் மூலம் லாகின் செய்ய் முடியும்.
கூகுள் பே, கூகுள் வாலட் - என்ன வித்தியாசம்?
கூகுள் பே என்ற UPI செயலி மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். ஆனால், கூகுள் வாலட் முக்கியமானவற்றை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைக்க முடியும்.
டிஜிட்டல் கார் சாவியை ஸ்டோர் செய்ய முடியுமா?
கூகுள் வாலட் தற்போதைக்கு பி.எம்.டபுள்யு. (BMW) ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் இணைந்து அதன் குறிப்பிட்ட கார் மாடல்களில் டிஜிட்டல் கார் கீ வசதி செயல்படும் என்று கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் மற்ற செயலிகளுடன் இணைந்து இது இயங்கும் வகையில் ’கூகுள் வாலட்’ வடிவமைக்கப்பட்டுள்ளது. பி.வி.ஆர்.(PVR), ஐநாக்ஸ் (INOX), ஏர் இந்தியா, இண்டிகோ, ஃப்லிப்கார்ட், Pine Labs, ஐதராபாத் மெட்ரோ, கொச்சி மெட்ரோ, VRL டிராவல்ஸ், அபி பஸ், டோமினோஸ், ஷாப்பர்ஸ் ஷாப் (Shoppers Stop) உள்ளிட்ட 20 நிறுவனங்களுடன் இணைந்து இந்த செயலி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.