• களைகட்டிய ஈஷா சிவராத்தி விழா.. பங்கேற்ற இந்திய சினிமா பிரபலங்கள்!


கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் இந்திய திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். கடவுள் சிவனுக்குரிய முக்கிய வழிபாடு நாட்களில் சிவராத்திரியும் ஒன்று. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி திதி சிவராத்திரியாக கொண்டாடப்பட்டாலும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. இது மகா சிவராத்திரியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் சிவ பக்தர்கள் முதல் நாளில் ஒருபொழுது உணவருந்தி இரவு கண் விழித்து நான்கு கால பூஜைகளில் பங்கேற்று மறுநாள் காலை நீராடி உணவருந்தி விரதத்தை நிறைவு செய்வார்கள். மேலும் படிக்க..



  • விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வெற்றி நிச்சயமா? குவியும் மக்கள்! முடங்கி போன செயலி!


தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் செயலி அறிமுகமான சில மணி நேரத்திலேயே முடங்கி போனது ஒட்டு மொத்த அரசியல் வட்டாரத்தையும் அதிரவைத்துள்ளது. பொதுவாக தமிழ் சினிமாவுக்கும் தமிழ்நாட்டின் அரசியலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. சொல்லப்போனால் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இதற்கு முன் இருந்தவர்களில் ஒரு சிலரை தவிர்த்து மற்ற எல்லோரும் சினிமாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாகவே இருந்துள்ளனர். அதேசமயம் சினிமாவில் நடித்து மக்களின் அன்பைப் பெற்று அரசியலுக்குள் நுழைந்து சாதித்து விடலாம் என கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மேலும் படிக்க..



  • ஓ.பி.எஸ். அணி சார்பில் நாளை விருப்பமனு! கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு!


மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட கூட்டணி விவகாரங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டி வருகின்றனர். மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடம் நாளை விருப்பமனு பெறப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது. மேலும், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு ஒன்றையும் அமைத்துள்ளார். அந்த குழுவில் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் , ஆர். தர்மர், புகழேந்தி உள்பட 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..



  • தஞ்சை பெரிய கோயிலில் விடிய விடிய நடந்த சிவராத்திரி பூஜை! பக்தியில் திளைத்த பக்தர்கள்!


தஞ்சாவூர்: மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெறும். மேலும் படிக்க..