தமிழ்நாடு:



  • தமிழகத்தில் உலக மகளிர் தினம் கொண்டாட்டம் - ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி மகிழ்ச்சி 

  • தமிழ்நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா உற்சாக கொண்டாட்டம் - சிவலாலயங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் 

  • டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு - 6,244 பணியிடங்களுக்கு 20,37,094 பேர் விண்ணப்பம் 

  • நீலகிரியில் காட்டு யானை தாக்கி 2 பேர் உயிரிழப்பு - உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம் 

  • குற்றவாளிகள் சம்பவம் நடந்த எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில் தான் ஆஜராக வேண்டும் - வேறு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது என உயர்நீதிமன்றம் கருத்து 

  • பெண் பயணிகள் பாதுகாப்புக்காக பிரத்யேக உதவி எண் தொடக்கம் - சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு 

  • மாணவர்களின் நலன் கருதி இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ் 

  • தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் செயலி அறிமுகம் - ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தியதால் சர்வர் முடக்கம் 

  • கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்தி விழா - சிறப்பு அழைப்பாளராக துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கார் பங்கேற்பு  

  • அரசுக்கு எதிரான கருத்துகளை கூறியதாக கல்வி செயற்பாட்டாளர் ஆசிரியை உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் - பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் 

  • போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி அதிமுக சார்பில் மார்ச் 12 ஆம் தேதி போராட்டம் அறிவிப்பு 

  • தமிழ்நாட்டில் மார்ச் 14 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் - சென்னை வானிலை மையம் அறிவிப்பு

  • நாடாளுமன்ற தேர்தலில் விசிக கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியது திமுக - மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு 

  • ஹோலி பண்டிகையை முன்னிட்டு சென்னை -நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு 


இந்தியா: 



  • மகளிர் தின ஸ்பெஷலாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு - பிரதமர் மோடி அறிவிப்பு 

  • கர்நாடகாவில் பைக் டாக்ஸிகளுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவு 

  • பெங்களூருவில் கடும் குடிநீர் பற்றாக்குறை - தண்ணீரை வீணாக்கினால் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவிப்பு

  • நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளுக்கான காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - வயநாட்டில் ராகுல் காந்தி போட்டி 

  • டெல்லி சாலையில் தொழுகை செய்த இஸ்லாமியர்களை எட்டி உதைத்த காவல் அதிகாரி சஸ்பெண்ட் 

  • மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க தெலுங்கு தேசம் கட்சி முடிவு 

  • மக்களவை உறுப்பினராக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் சுதா மூர்த்தி நியமனம் 

  • பெங்களூரு ஹோட்டல் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜவுளி வியாபாரி கைது 

  • இந்தியாவில் முதல் முறையாக பிரத்யேக ஓடிடி தளத்தை அறிமுகம் செய்த கேரள அரசு - சினிமா ரசிகர்கள் வரவேற்பு 


உலகம்: 



  • சீனாவுடன் மோதலை விட போட்டியை தான் விரும்புகிறோம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 

  • பேஸ்புக் தான் அமெரிக்க மக்களின் உண்மையான எதிரி என முன்னாள் அதிபர் டிரம்ப் பேச்சு 

  • கனடாவில் கத்திக்குத்து தாக்குதலில் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு 

  • காசாவில் தலை விரித்தாடும் பஞ்சம் - ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 20 குழந்தைகள் உயிரிழப்பு 


விளையாட்டு: 



  •  இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்துள்ளது - ரோகித் சர்மா, சுப்மன் கில் சதம் 

  • பெண்கள் பிரிமீயர் லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி உத்திரப்பிரதேச வாரியர்ஸ் அணி வெற்றி 

  • இன்டியன்வெல்ஸ்  ஓபன் டென்னிஸ் போட்டி; முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்மித் நாகல் தோல்வி 

  • ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் இயக்குநர் பதவியில் இருந்து ஹாமில்டன் மசகட்சா ராஜினாமா