ராமேசுவரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பான நபர் குறித்தான புகைப்படக்காட்சியை, தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டு, அந்த நபர் தொடர்பான தகவலை தெரிவித்தால் ரூ. 10 லட்சம் தரப்படும் என என்.ஐ.ஏ வெளியிட்டுள்ளது. 






குண்டுவெடிப்பு:


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல ஓட்டலில் கடந்த 1ஆம் தேதி சக்தி குறைந்த குண்டுவெடித்து சிதறியது. இந்த குண்டுவெடிப்பில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்பட 10 காயமடைந்தனர். அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் குறித்து பெங்களூரு போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


பெங்களூரு, தார்வாட், ஹுப்ளி ஆகிய இடங்களில் 4 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பில் குற்றவாளியாக சந்தேகிக்கப்படுபவரின் அடையாளங்களை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சிசிடிவி கேமரா காட்சிகளின் உதவியுடன் வரைந்துள்ளனர். ஆனால், சிசிடிவியில் காணப்படும் நபரை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.


இந்த குண்டுவெடிப்பு பின்னணியில் எந்த பயங்கரவாத அமைப்பு இருக்கிறது? என்ன காரணத்திற்காக குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்த மர்மநபர் ராமேஸ்வரம் கஃபே ஓட்டலை தேர்வு செய்தார்கள் என்பன போன்ற விஷயங்கள் தெரியாமல் மர்மமாக இருந்து வருகிறது. இதற்கிடையில் இந்த வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகள், குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை தொடங்கி உள்ளனர்.


ரூ.10 லட்சம் சன்மானம்:


இந்நிலையில், புகைப்பட காட்சியை வெளியிட்டுள்ள என்.ஐ.ஏ, இந்த புகைப்படத்தில் தெரியும் நபர் குறித்து தகவல் தெரிவித்தால், 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது. மேலும், அந்த புகைப்படத்தில் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிட்டுள்ளது. 


Also Read: புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்...விசாரணையை தொடங்கிய சிறப்பு குழு


Also Read: DA Hike News in Tamil: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் - அமைச்சர் பியூ