- பாஜக கூட்டணியில் ஒ.பி.எஸ்., டிடிவி - நள்ளிரவில் பேச்சுவார்த்தை: யாருக்கு எத்தனை தொகுதிகள்?
குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய உரிமையையும் பறிக்கவில்லை என. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதி இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொருத்தவரையில் திமுக தலைமையிலான கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான தனித்தனி கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை. பாஜக பல சிறிய கட்சிகளை தொடர்ந்து தனது கூட்டணியில் சேர்த்து வருகிறது. அந்த வகையில் தான், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அணி மற்றும் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக ஆகியவையும் தற்போது பாஜக கூட்டணியில் இணைந்துள்ளன. மேலும் படிக்க..
- தேர்தல் பத்திரங்கள் விவகாரம்.. தேர்தல் ஆணையத்திடம் முக்கிய தகவலை பகிர்ந்த எஸ்பிஐ வங்கி.. அடுத்து என்ன?
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதோடு, திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நிதி பெற்றுள்ளன? என்பது தொடர்பான விவரங்களை, மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் பத்திரங்களை விநியோகித்த எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது. இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 13ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் கேட்டு எஸ்.பி.ஐ. வங்கி உச்ச நீதிமன்றத்தை நாடியது. மேலும் படிக்க..
- இனி செப்டம்பர் 17 ஐதராபாத் விடுதலை தினம்: மத்திய அரசு அறிவிப்பு; வரலாறு என்ன?
இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17 ஆம் தேதி தெலுங்கானா விடுதலை தினத்தை கொண்டாடும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார். இனி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ஆம் தேதி ஐதராபாத் விடுதலை நாளாகக் கொண்டாடப்படும் என்று மத்திய அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், ”ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 13 மாதங்களுக்கு ஐதராபாத் சுதந்திரம் பெறவில்லை, நிஜாம்களின் ஆட்சியின் கீழ் அது தொடர்ந்தது. 'ஆபரேஷன் போலோ' என்ற ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி நிஜாமின் ஆட்சியில் இருந்து ஐதராபாத் விடுவிக்கப்பட்டது. மேலும் படிக்க..
- நாடு முழுவதும் அமலுக்கு வந்தது குடியுரிமைத் திருத்தச் சட்டம் - மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் இன்று முதல் அதாவது மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் பல அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை அப்போது நடைமுறைப்படுத்தவில்லை. மேலும் படிக்க..