தமிழ்நாடு:



  • தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  • நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • தமிழ்நாட்டில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்படமாட்டாது - முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவிப்பு

  • சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் நடிகர் சரத்குமார்

  • இ-சேவை மையங்கள் மூலம் எல்.எல்.ஆர் பெற விண்ணப்பம் இன்று முதல் அமல் 

  • தமிழ்நாடு முழுவதும் நேற்று காலை முதல் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை தொடங்கினர் 

  • லாரி மீது தனியார் பேருந்து உரசியதில் 4 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

  • அரசு அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் - அமைச்சர் கே.என்.நேரு

  • சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் முதியவர் மற்றும் வாலிபர் என இரண்டு பேரிடம் மத்திய சிறையில் சிறப்பு குழு விசாரணை

  • ஜாபர் சாதிக் விவகாரத்தில் உண்மை வெளிவந்தால் திமுக அரசு வீட்டுக்குச் செல்லும் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

  • தமிழ்நாடு காவல்துறையில் 5 ஏ.எஸ்.பி.க்கள் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 

  • தமிழ்நாட்டில் வரும் 18 ஆம் தேதி தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்தியா: 



  • மாதாந்திர பூஜைக்காகசபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுவதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

  • நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் இன்று முதல் அதாவது மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • ஹரியானா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் நயாப் சிங் சைனி.

  • ஆதார் விவரங்களை திருத்துவதற்கான கால அவகாசம் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்கான அவகாசம் ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • அகமதாபாத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார்.

  • மத்திய பிரதேசத்தில் திருமண ஊர்வலத்திற்கு சென்ற வண்டி மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு.

  • உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் பத்திர விவரங்களை சமர்பித்தது எஸ்பிஐ வங்கி; தேர்தல் ஆணைய வெப்சைட்டில் வரும் 15ம் தேதி வெளியிடப்படும்.

  • சிஏஏவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு; தலைநகர் டெல்லி, அசாமில் தீவிரமடையும் போராட்டம் - பிரதமர் மோடி, அமித் ஷா உருவபொம்மை எரிப்பு


உலகம்: 



  • பிரேசிலில் டெங்கு காய்ச்சலுக்கு 391 பேர் உயிரிழப்பு.

  • ரஷ்யாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 15 பேர் உயிரிழப்பு என தகவல்.

  • செங்கடலில் அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியளர்கள் ஏவுகணை தாக்குதல்.

  • சீனா நிலக்கரி சுரங்க கிடங்கு இரிந்து விழுந்து விபத்து - இதுவரை 5 பேர் உயிரிழப்பு.

  • வெளிநாட்டு கடன்களிலிருந்து பாகிஸ்தானை மீட்போம் - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சபதம். 


விளையாட்டு:



  • பெங்களூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஐபிஎல் போட்டிகள் அங்கு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

  • நடப்பாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி நீக்கப்படுவார் என்று தகவல்.

  • மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது பெங்களூரு அணி.

  • ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி: விதர்பா அணிக்கு 538 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை

  • இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் முழு உடல் தகுதி பெற்றுள்ளதால் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.