• பாஜகவிற்கு லாக் - ”பிரியும் இலாக்காக்கள்” சந்திரபாபு -6, நிதிஷ்குமார் - 5, குமாரசுவாமி, சிராக் பஸ்வான்?


பாஜக கூட்டணியில் சந்திரபாபு மற்றும் நிதிஷ்குமார் முறையே, 3 மற்றும் 2 கேபினட் அமைச்சர் பதவிகளை கேட்பதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற மக்களவைக்கான 18வது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், இந்தியாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டண் ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதன்படி, தனிப்பெரும் கட்சியான பாஜக, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக நேற்று டெல்லியில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பாஜக ஆலோசனை நடத்தியது. மேலும் படிக்க..



  • உத்தரபிரதேசத்தில் பாஜக தோற்றது எப்படி? கைவிட்ட ராமர், சறுக்கிய புல்டோசர் பாபா, மாயாவதி எங்கே?


மோடி -யோகியின் இரட்டை இன்ஜின் ஆட்சி, ராமர் கோயில் என பலவற்றை முன்னிலைப்படுத்தியும், உத்தரபிரதேசத்தில் பாஜக தேர்தலில் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பு வரை, பாஜக கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும், அக்கட்சி மட்டுமே தனிப்பெரும்பான்மை பெறும் என மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் பேசி வந்தனர். அதற்கு முக்கிய காரணம் நாட்டிலேயே அதிகபட்சமாக 80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசம் மாநிலம் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை தான். மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் என இரட்டை இன்ஜின் ஆட்சி, நீண்டகால எதிர்பார்ப்பை மேலும் படிக்க..



  • மோடியால் இனி இதையெல்லாம் செய்ய முடியாது..! பாஜக ஆட்சி Vs கூட்டணியை நம்பிய ஆட்சி, என்ன வித்தியாசம்?


பாஜக ஆட்சிக்கும், பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கும் இடையே உள்ள, வித்தியாசம் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். நாடாளுமன்ற மக்களவைக்கான 18வது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், இந்தியாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டண் ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதன்படி, தனிப்பெரும் கட்சியான பாஜக, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. மேலும் படிக்க..



  • வெளியே செல்லும் மக்களே..! 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..


தென்மேற்கு பருவ மழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. அதன்படி கேரள மற்றும் பிற மாநிலங்களில் பரவலாக மழை பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமழை பதிவாகி வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில், திருவாரூர் மற்றும் நாகையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க..



  • “கருணாநிதி என் அப்பா இல்ல; அப்படி இருந்தா ஜெயித்திருப்பேன்” - பாஜக தலைவர் அண்ணாமலை


மத்தியில் பாஜகவுக்கு கூட்டணி ஆட்சி என்பது புதிதல்ல, நாங்கள் அடுத்த 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை வழங்குவோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்றது. இதில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு இம்முறை தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மேலும் படிக்க..