தமிழ்நாடு:



  •  தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக 53 லட்சம் பேர் காத்திருப்பு என தமிழக அரசு தகவல்

  • அதிமுக நலன் கருதி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தொண்டர்களுக்கு சசிகலா அழைப்பு 

  • கூட்டணி ஆட்சியை வழிநடத்துவதில் பாஜகவுக்கு நல்ல அனுபவம் உள்ளது என வானதி சீனிவாசன் கருத்து 

  • மக்களவை தேர்தல் தோல்வி - மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்பதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

  • தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் மலர முடியாதபடி செய்துள்ளோம் என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

  • தோல்வியை படிக்கல்லாக மாற்றி 2026 தேர்தலில் வெற்றிக்கனியை பறிப்போம் என பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை

  • தேர்தலில் 8% வாக்குகளை பெற்ற விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி - மாநில கட்சி அந்தஸ்தை பெற உள்ளதாக தகவல்

  • போட்டியிட்ட 2 தொகுதிகளில் தனி சின்னத்தில் வெற்றி - 25 ஆண்டுகால கனவு நிறைவேறியதாக விசிக தலைவர் திருமாவளவன் நெகிழ்ச்சி 

  • தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

  • கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம் - மங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு


இந்தியா: 



  • வயநாடு, ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி - எந்த தொகுதியில் ராஜினாமா செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

  • மக்கள் நிராகரித்தும் மோடி மீண்டும் ஆட்சியமைக்க நினைப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

  • டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை - திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு பங்கேற்பு

  • மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சியமைய சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆதரவு கடிதம் 

  • நடப்பு மத்திய அமைச்சரவை கலைப்பு - ஜூன் 8 ஆம் தேதி மோடி பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல்

  • மகாராஷ்ட்ராவில் மக்களவை தேர்தலில் பாஜக பின்னடைவு - துணை முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் விலகுவதாக தகவல்

  • ஜூன் 7 ஆம் தேதி பாஜக கூட்டணியில் உள்ள மாநில முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

  • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் இயக்கத்தை தொடங்கி வைத்தார் மோடி 


உலகம்:



  • மெக்ஸிகோவில் பெண் மேயர் நடுரோட்டில் சுட்டுக்கொல்லப்பட்டதால் பரபரப்பு

  • சர்வதேச விண்வெளி மையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் வெற்றிகரமாக பயணம்

  • மக்களவை தேர்தல் வெற்றி - பிரதமர் மோடிக்கு பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து

  • லெபனான் மீது வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசிய இஸ்ரேல் - 173 பேர் மருத்துவமனையில் அனுமதி

  • பிரேசிலில் தனியார் விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் உயிரிழப்பு


விளையாட்டு: 



  • 2024 டி20 உலகக்கோப்பை; அயர்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

  • இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

  • உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று; இந்தியா - குவைத் அணிகள் இன்று மோதல் 

  • டி20 உலகக்கோப்பை; ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஓமன் பந்துவீச்சு தேர்வு