• "40 தொகுதிகளிலும் வெற்றி..ஆனால் வாக்கு சதவிகிதத்தில் சரிந்த தி.மு.க." பா.ஜ.க.விற்கு ஜாக்பாட்!


 தமிழ்நாடு மக்களவை தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதம் (Vote Percentage) தொடர்பான  விவரங்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. 21 இடங்களில் டெபாசிட்டை இழந்துள்ளது. தேர்தல் முடிவுகள் திமுக கூட்டணிக்கு சாதகமாக அமைந்தாலும் மேலும் படிக்க..



  • எந்தெந்த மாநிலங்களில் யாருக்கு வெற்றி? பா.ஜ.க.+ Vs I.N.D.I.A. கூட்டணி - மொத்த விவரம் இதோ!


 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆதிக்கம் செலுத்திய கட்சிகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. வாக்குப்பதிவிற்கு பிறகு 400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என பாஜக கூட்டணியும், 295 இடங்களை கைப்பற்றுவோம் என I.N.D.I.A. கூட்டணியும் பேசி வந்தது. ஆனால், பாஜக கூட்டணிக்கு 290 இடங்களிலும், எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி 230 இடங்களிலும் மட்டுமே முன்னிலை வகிக்கின்றன. எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால்,  மத்தியில் யார் ஆட்சி அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் படிக்க..



  •  ஸ்மிருதி இரானி முதல் எல்.முருகன் வரை.. தோல்வியைச் சந்தித்த மத்திய அமைச்சர்கள்!


மக்களவை தேர்தல் முடிவுகள் பெரும் ஆச்சரியத்தை சில கட்சிகளுக்கும், அதிர்ச்சியை சில கட்சியினருக்கும் தந்துள்ளன. கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக முடிவுகள் வந்திருக்கின்றன. 370 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டது. ஆனால், பாஜகவுக்கு தற்போது தனிப்பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. அதை விட முக்கியமான விஷயம் என்னவென்றால் பெரும்பாலான இடங்களில் பாஜக மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் தோல்வியை சந்தித்துள்ளனர். பின்னடைவை சந்தித்து வருகின்றனர். அவர்கள், யார்? என்று தற்போது பார்க்கலாம். மேலும் படிக்க..



  • மத்தியில் யார் ஆட்சி? NDA & I.N.D.I.A. கூட்டணி இன்று ஆலோசனை! யார் ஆதரவு யாருக்கு?


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை தொடர்ந்து, மோடி மூன்றாவது முறையாக பிரதமராவார் என பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது. நாடு முழுவதுமுள்ள மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவில், பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. கடந்த இரண்டு தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மை பெற்ற பாஜக கூட இந்த முறை சுமார் 240 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. மேலும் படிக்க..



  • 2019ல் சுயேட்சையாக வெற்றி.. 2024ல் பாஜகவில் சேர்ந்து தோல்வி.. கருணாஸ் பட நடிகைக்கு நேர்ந்த கதி!


மகாராஷ்ட்ராவில் போட்டியிட்ட நடிகை நவ்னீத் ரவி ராணா தோல்வியடைந்ததை பலரும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.  இந்தியாவில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டது. காலை முதல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக 3வது முறையாக தொடர்ச்சியாக பாஜக வென்றாலும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை மேலும் படிக்க..