- அதானி - ஹிண்டன்பெர்க் விவகாரம்: நிபுணர் குழு அறிக்கை - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் நியமித்த 6 பேர் கொண்ட குழு கடந்த ஆண்டே சமர்பித்தது. இந்தியாவின் மிக முக்கிய தொழிலதிபர்களில் அதானியும் ஒருவர். அவரது தலைமையிலான அதானி குழுமம், குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் துறைமுகம், எரிசக்தி மற்றும் உணவுப்பொருள் உட்பட பல்வேறு தொழில்துறைகளில் இந்தியாவின் பல மாநிலங்களில் மட்டுமின்றி, பல அவெளிநாடுகளிலும் தொழில் செய்து வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அந்நிறுவனத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனை நடைபெறுகிறது. மேலும் படிக்க..
- சபரிமலையில் இனி ஸ்பாட் புக்கிங் கிடையாது.. ஜனவரி 20-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி.. தேவஸ்தானம் அறிவிப்பு..
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். உலக புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கார்த்திகை மாதம் முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். அதனை தொடர்ந்து மகர விளக்கு ஜோதி பூஜைக்காக நடை திறக்கப்பட்டிருக்கும். இதனை தவிர்த்து மாதந்தோறும் பூஜைக்காக நடை திறக்கப்பட்டிருக்கும். மேலும் படிக்க..
- இன்னும் சஸ்பென்ஸ்! எந்த சிற்பியின் சிலை அயோத்தியில் பிரதிஷ்டை? விரைவில் அறக்கட்டளை அறிவிப்பு!
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோயிலில் ஜனவரி 22ஆம் தேதி ராம்லாலா சிலை (குழந்தை வடிவிலான ராமர்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராம்லாலாவின் மூன்று சிலைகள் இந்தியாவின் சிறந்த மூன்று சிற்ப கலைஞர்களால் செதுக்கப்பட்டது. இந்த கோயிலில் எந்த சிலை பிரதிஷ்டை செய்வது என்பது குறித்து ராமர் கோயில் அறக்கட்டளை இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான பிஎஸ் எடியூரப்பா கடந்த திங்கள் கிழமை (ஜனவரி 1) சிற்பி அருண் யோகிராஜுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அயோத்தியின் புதிய கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக அவரது சிலை தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் படிக்க..
- அப்பாடா! டிரக் ஓட்டுநர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்! பேச்சுவார்த்தையில் உடன்பாடு!
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்திய தண்டனை சட்டம், 1860க்கு பதில் பாரதிய நியாய சன்ஹிதா என்ற பெயரில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய ஆதார சட்டம், 1872க்கு பதில் பாரதிய சாக்சியா (இரண்டாவது) என்ற பெயரிலும், குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1898க்கு பதில் பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா என்ற பெயரிலும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய குற்றவியல் சட்டத்தில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சர்ச்சைக்கு உள்ளான தேசத்துரோக சட்டப்பிரிவுகள் புதிய சட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும் படிக்க..
- "சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் முழுதும் பொதுத்தளத்தில் வெளியிட வேண்டும்" உச்ச நீதிமன்றம்
மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டது வந்தது. அந்த வகையில், பிகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவரங்களும் சாதிவாரி பொருளாதார, கல்வி நிலை குறித்த தகவல்களையும் பிகார் அரசு வெளியிட்டது. மேலும் படிக்க..