- நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல் - காங்கிரஸின் கோரிக்கைக்கு சம்மதிக்குமா திமுக? இன்று பேச்சுவார்த்தை
நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக, மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.மேலும் படிக்க
- பாஜகவின் நிபந்தனைகளுக்கு பச்சைக்கொடி? கூட்டணியில் இருந்து விலகும் நிதிஷ்? இன்றே ராஜினாமா?
பாஜக உடன் கைகோர்க்க இருப்பதாக கூறப்படும் நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகாரில் பாஜக உடன் சேர்ந்து ஆட்சி செய்து வந்த நிதிஷ்குமார், கடந்த 2022ம் ஆண்டு அந்த கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறினார். தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில். நிதிஷ்குமார் மீண்டும் பாஜக பக்கம் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படிக்க
- தொடர் வெற்றியை தக்க வைக்குமா தமிழ் தலைவாஸ்? இன்று பலம் வாய்ந்த யு மும்பா அணிக்கு எதிராக மோதல்!
ப்ரோ கபடி லீக் சீசன் 10 இன் 94வது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி (ஜனவரி 28) இன்று யு மும்பா அணியை எதிர்கொள்கிறது.
பாட்னாவில் உள்ள பாட்லிபுத்ரா உள்விளையாட்டு மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்குகிறது. ப்ரோ கபடி லீக் வரலாற்றில் தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 10 முறை யு மும்பா அணியை எதிர்கொண்டுள்ளது. இது தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக 7 வெற்றிகளுடன் யு மும்பா அணி முன்னிலையில் உள்ளது.மேலும் படிக்க
- ஜல்பைகுரியில் இருந்து இன்று மீண்டும் தொடங்கும் ராகுல் காந்தி யாத்திரை.. மம்தா பானர்ஜி பங்கேற்பா..?
இந்தியா கூட்டணியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கடந்த புதன்கிழமை தனது கட்சி வரவிருக்கும் மக்களவை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் என்று அறிவித்தார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை இரண்டு நாள் இடைவெளிக்கு பிறகு இன்று மேற்கு வங்கம் மாநிலம் ஜல்பைகுரியில் இருந்து தொடங்குகிறது.மேலும் படிக்க
- 8 நாள் பயணமாக ஸ்பெயின் புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின்; எதற்கு தெரியுமா?
வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் 8 நாள் பயணமாக ஸ்பெயின் புறப்பட்டார்.
விமான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பினை நடத்தினார். அதில் பேசிய அவர், ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை ஏற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாடு வெற்றிகரமாக அமைந்தது. தற்பொழுது நான் ஸ்பெயின் செல்கிறேன் வருகின்ற ஏழாம் தேதி நான் மீண்டும் தமிழ்நாடு திரும்புவேன் என தெரிவித்தார். மேலும் படிக்க