தமிழ்நாடு:



  • முதலீடுகளை ஈர்ப்பதற்காக 8 நாள் அரசுமுறை பயணமாக ஸ்பெயின் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  • தேனி லோயர்கேம்பில் உள்ள பண்ணை வீட்டில் இளையராஜாவின் மகள் பவதாரணியின் உடல் நல்லடக்கம்.

  • தமிழ்நாட்டில் பாஜகவுக்கு அட்ரஸ் தந்தது ஜெயலலிதா; கொந்தளித்த கே.பி.முனுசாமி

  • தமிழ்நாடு முழுவதும் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

  • இரண்டு மாநிலங்களில் தேசிய கொடியை ஏற்றிய பெருமை எனக்கு மட்டும்தான் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு.

  •  காந்தியை நான் அவமதித்துவிட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானவை - ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

  • 12ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2025ஆம் ஆண்டு மே மாதம், தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெற உள்ளது.

  • கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்து அறிவிப்பேன் என்றும்  நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்றும் டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார்.

  • நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கான பொறுப்பாளர்களை நியமித்து பாஜக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  • தமிழ்நாட்டில் சட்ட - ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.


இந்தியா: 



  • பீகார் அரசியல் அதிரடி திருப்பம்: முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று ராஜினாமா..?

  • டெல்லி அரசை கவிழ்க்க 7 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுக்கு தலா ரூ.25 கோடி லஞ்சம்; பாஜக மீது முதலமைச்சர் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு

  • கேரள ஆளுநர் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா; 19 பேர் மீது வழக்குப்பதிவு

  • உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டத்தை இன்று (ஜனவரி 28) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

  • மத்தியக் கல்வித் துறை சார்பில் 2021- 22ஆம் ஆண்டுக்கான உயர் கல்வி அகில இந்திய ஆய்வறிக்கை (All India Survey on Higher Education - AISHE) வெளியிடப்பட்டுள்ளது.

  • மக்களவை தேர்தலை முன்னிட்டு நடப்பாண்டிற்கான இடைக்கால பட்ஜெட், வரும் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

  • நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிக்க சுமார் 12 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


உலகம்: 



  • ஈரானில் பாகிஸ்தானியர்கள் 9 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளன.

  • பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா தெரிவித்துள்ளது.

  • துருக்கியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5 ஆக பதிவு.

  • சீனா- சிங்கப்பூர் இடையே விசா தேவையில்லை - இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளது. 


விளையாட்டு: 



  •  இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்து முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ரிக்கிபாண்டிங்கின் சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார்.

  • இத்தாலியின் போலெல்லி அண்ட்ரியா வாவசோரி ஜோடியை வீழ்த்தி போபண்ணா ஜோடி ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றது.

  • ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் மகளிர் ஒற்றயைர் பிரிவில் பெலரஸ் வீராங்கனை சபலென்கா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

  • ப்ரோ கபடி லீக்: யூ மும்பா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்குகிறது தமிழ் தலைவாஸ் அணி