• டெல்லி வரை உணரப்பட்ட நில அதிர்வுகள்.. சீனாவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!


சீனாவில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோயில் 7.2 ஆக இருந்துள்ளது. நிலநடுக்கம் மிகவும் வலுவாக இருந்ததால், அதன் அதிர்வு டெல்லி - என்சிஆர் வரை உணரப்பட்டது. நிலநடுக்கமானது நேபாளம் - சீனா எல்லையை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் உள்ள மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.  இதுகுறித்து நிலநடுக்கத்திற்கான தேசிய மையம், இந்த நிலநடுக்கத்தின் மையம் தெற்கு சீனா சின்ஜியாங்கில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் படிக்க.,



  • ஞாயிறில் 90.. நேற்று மட்டும் 100.. அயோத்தி விமான நிலையத்திற்கு படையெடுத்த விமானங்கள்!


இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அயோத்தியில் குழந்தை வடிவிலான ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையத்தில் சுமார் 100 தனியார் விமானங்கள் வந்து இறங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக  சுமார் 7,000க்கு மேற்பட்ட முக்கியஸ்தர்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதில், நடிகையும் மதுரா எம்பியுமான ஹேமமாலினி, நடிகர்கள் ரஜினிகாந்த், பவன் கல்யாண், பாடகர் ஷங்கர் மகாதேவன், இயக்குநர்கள் மதுர் பண்டார்கர், சுபாஷ் காய், சீரஞ்சீவி, ராம்சரண், பிடி உஷா ஆகியோர் பிரம்மாண்ட விழாவில் கலந்து கொண்டனர். மேலும் படிக்க.,



  • சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல் - பிப்ரவரி 1ல் பாமக பொதுக்குழு கூட்டம், கூட்டணி முடிவு வெளியாகுமா?


பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “சென்னையில் பிப்ரவரி 1-ஆம் தேதி பா.ம.க. சிறப்புப் பொதுக்குழு கூட்டம்! பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் -2024 வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள இராணி மெய்யம்மை அரங்கத்தில் பிப்ரவரி ஒன்றாம் தேதி (வியாழக்கிழமை) காலை 11.00 மணிக்கு இப்பொதுக்குழு தொடங்கும். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையேற்பார். மேலும் படிக்க.,



  • நாடாளுமன்ற தேர்தலுக்கு என்ன செய்யலாம்? - மநீம நிர்வாகிகளுடன் கமல் இன்று அவசர ஆலோசனை


மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனைக் கூட்ட முடிவில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி, கட்சி தலைவர் கமல்ஹாசன்  தலைமையில் இன்று காலை 11:30 மணிக்கு தலைமை அலுவலகத்தில் (ஆழ்வார்பேட்டை) மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க.,



  • இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம் - வெளிநாடு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவுகள் என்ன?


தமிழ்நாடு அரசின் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்தபடி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரவை அறையில் காலை 11 மணியளவில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் படிக்க.,