தமிழ்நாடு:
- நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழ்நாட்டில் 6.19 கோடி வாக்காளர்கள், ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்
- திமுக இளைஞரணி மாநாடு வெற்றியை கண்டு அரசியல் எதிரிகள் அலறல், பாஜகவினர் வதந்தி பரப்பும் வாட்ஸ் அப் யுனிவர்சிட்டிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
- விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் - ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்ரல் 1 முதல் புதிய கட்டுப்பாடு
- அலங்காநல்லூர் அருகே பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய ஜல்லிக்கட்டு அரங்கம் - முதலமைச்சர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்
- நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுகவில் தொகுதிப்பங்கீடு, பிரசாரத்திற்கு தனித்தனி குழு - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- தமிழ்நாட்டில் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் விவகாரம்; எடப்பாடி தொடர்ந்த வழக்கு தள்ளிவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு
- நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
- 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பணிகள் திட்டமிடல் தொடர்பாக நாளை முதல் திமுக தொகுதி வாரியான பொறுப்பாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளது.
- அடிப்படை கூட தெரியாமல் பேசுகிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் - அமைச்சர் சேகர் பாபு
இந்தியா:
- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு - பிரதமர் மோடி முன்னிலையில் 121 வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழுங்க கோலாகலமாக நடந்தது
- அசாமில் கோயிலுக்கு செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு - தொண்டர்களுடன் அமர்ந்து சாலையில் போராட்டம்
- ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்து வைத்தார்.
- புதிய நோய் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
- இந்தி தெரியாது போடா என்ற வாசகம் பதிந்த டி-ஷர்ட் அணிந்த தன்னுடைய புகைப்படத்தை பதிவிட்டு பாஜகவின் இந்த பதிவுக்கு உதயநிதி பதிலடி தந்துள்ளார்.
- மதமும் கடவுளும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்குவது மிகவும் ஆபத்து: ராமர் கோயில் திறப்பு குறித்து நடிகர் கிஷோர் கருத்து
- அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, இனி ஆண்டுதோறும் அங்கு 5 கோடி சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகம்:
- ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் - உயிரிழப்பு எண்ணிக்கை 28 ஆக உயர்வு.
- இலங்கையின் தெற்கு மாகாணத்தில் 5 பேர் சுட்டுக்கொலை.
- பொது அறிவு கொண்ட சாதாரண நபர் அமெரிக்க அதிபராக வேண்டும் - எலன் மஸ்க்
- சீனாவில் நிலச்சரிவு: மண்ணுக்குள் புதைந்த 47 பேர்- மீட்புப்பணிகள் தீவிரம்
- பாப் பாடலை கேட்டு ரசித்த சிறுவன் - 12 ஆண்டுகள் கடும் தண்டனை விதித்த வடகொரியா அரசு
விளையாட்டு:
- இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்.
- கேலோ இந்தியா போட்டி: பதக்க பட்டியலில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம்.
- இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
- பிரபல நடிகர் விக்ராந்தின் மகன் யஷ்வந்த் 14 வயதுக்குட்பட்ட தமிழ்நாடு அணிக்கு தேர்வாகியுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.