• அனல் பறக்கும் தேர்தல் திருவிழா.. தமிழ்நாட்டில் ஜே.பி.நட்டா இன்று பரப்புரை 




தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதல்கட்டமாக மற்றும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19  ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சிட்டி தொடங்கி கிராமம் வரை தேர்தல் பரப்புரை களைகட்டியுள்ளது. அந்த வகையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று திருச்சி, கரூர், சிதம்பரம், விருதுநகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். வாகன பேரணியில் மக்களை சந்திக்கும் ஜே.பி.நட்டாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க மக்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் படிக்க



  • அரசியலமைப்புக்கு விசுவாசமாக இருங்க.. வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் அறிவுரை 


இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட், சமீபகாலமாக வழக்குகளில் வழங்கி வரும் தீர்ப்புகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஜனநாயகத்தில் தனிநபர்களுக்கு அரசியல் சித்தாந்தம் என்பது உள்ளது. வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு அரசியல் கட்சிகள் மீது விசுவாசம் இருக்கக்கூடாது. நீதிமன்றம் மற்றும் அரசியலமைப்பின் மீது விசுவாசம் இருக்க வேண்டும். நீதிமன்றம் சுதந்திரமாகவும், பாரபட்சமின்றியும் செயல்படுவதை பல நேரங்களில் நிலை நிறுத்தியுள்ளது. மேலும் படிக்க



  • இன்று ஒரே நாளில் 2 ஐபிஎல் போட்டிகள்.. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு நடக்குமா?


கிரிக்கெட் திருவிழாவின் ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று  2 போட்டிகள் நடைபெறுகிறது. 20வது போட்டியில் மாலை 3.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேபிட்டல்ஸ் அணியை நேருக்கு நேர் எதிர்கொள்கிறது. இதில் மும்பை அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேபோல் 21வது போட்டியில் குஜராத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகின்றது. மேலும் படிக்க



  • விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்


எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பச்சை துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர் என தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும் மோடி மீண்டும் பிரதமரானால் ஜனநாயகம் என்ற ஒன்றே இந்தியாவில் இருக்காது என தெரிவித்தார். கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சிதம்பரம் தொகுதி விசிக வேட்பாளர் தொல் திருமாவளவனுக்கு வாக்கு சேகரித்தார். மேலும் படிக்க