✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

CM Stalin: ”எரியுது மாலா” வடிவேலு வசனத்தை பேசி பாஜகவை கலாய்த்த முதலமைச்சர் ஸ்டாலின்

செல்வகுமார்   |  06 Apr 2024 11:50 PM (IST)

CM Stalin Campaign: பச்சைத் துண்டு போட்டு கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்தவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரையின்போது விமர்சனம் செய்தார்

முதலமைச்சர் ஸ்டாலின்

மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது என மக்களவை தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசினார்.

தமிழ்நாட்டில் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தருணத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கடலூரில் நடைபெற்று வரும் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, விசிக கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதி வேட்பாளருமான திருமாவளவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  இந்தியா கூட்டணியை பெற வைக்கும்  என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய முதலமைச்சர், போராட்ட களத்திற்கு முதலில் வருபவர் திருமா  என்றார். மேலும் பேசுகையில், இட ஒதுக்கீட்டால், சிலர் உயர்ந்ததை பொறுக்க முடியவில்லை. ”எரியுதுடி மாலா பேன போடு” என்னும் வடிவேலு வசனத்தை பேசி பாஜகவை விமர்சித்தார்.

ஜனநாயகம் இருக்காது:

பாஜக மற்றும் பாமக கூட்டணியானது சந்தர்ப்பவாத கூட்டணி.  மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. பிரதமர் மோடிக்கும், சமத்துவத்திற்கும் சம்பந்தமே இல்லை; பலரின் தியாகத்தால் கிடைத்தது தான் சமூக நீதி. சமூகநீதி கூட்டணிதான் இன்றைய தேவை. நமக்கு கிடைத்த வாய்ப்புதான் இந்தியா கூட்டணி. தமிழ்நாட்டில் வேரூன்றிய சமூக நீதி இந்தியா முழுவதும் பரவ உருவான வாய்ப்புதான் இந்தியா கூட்டணி என தெரிவித்தார். 

Also Read: Power Pages 8: தோல்வியே காணாத கலைஞரின் அரசியல் பயணம்! எம்.ஜி.ஆர் ஆதரவு முதல் எதிர்ப்பு வரை!

தமிழ்நாட்டில் நீட் தேர்வு நுழைய காரணமானவர் எடப்பாடி பழனிச்சாமி.மோடி இந்தியாவிற்கு இருண்ட ஆட்சியை தருவது போல தமிழகத்திற்கு இருண்ட ஆட்சியை தந்தவர் பழனிச்சாமி,பச்சை துண்டு போட்டு கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்தவர் பழனிச்சாமி. அரசியல் அமாவாசையாக பழனிசாமி உள்ளார் எனவும் முதல்வர் ஸ்டாலின்  விமர்சித்தார்

அதிமுக இருக்கும் தொகுதிகளையும் திமுக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பறிக்கும் எனவும், இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை திமுக செய்த நலத்திட்டங்கள் அந்த வெற்றியைத் தரும் என்றும் அவர் தெரிவித்தார்.

”அண்ணனுக்கு உறுதுணையாக இருப்போம்”

இதற்கு முன்பாக பேசிய விசிக தலைவர் திருமாவளவன் , சிதம்பரத்திலும் தளபதி ஸ்டாலின் தான். மயிலாடுதுறையிலும் வேட்பாளர் தளபதி, அண்ணன் ஸ்டாலின் அவர்கள்தான்.  40 தொகுதியிலும் நாம் வெற்றிப் பெற்றால், பாசிச பா.ஜ.கவை எப்படி விரட்டியடிக்க வேண்டும் என்பதை அண்ணன் பார்த்துக்கொள்வார். அண்ணன் தளபதி எடுக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் உற்ற துணையாக இருப்போம், குரல் கொடுப்போம் என தெரிவித்தார். 

Published at: 06 Apr 2024 07:42 PM (IST)
Tags: thirumavalavan tamilnadu vck DMK CM STALIN #tamilnadu
  • முகப்பு
  • தேர்தல் 2024
  • CM Stalin: ”எரியுது மாலா” வடிவேலு வசனத்தை பேசி பாஜகவை கலாய்த்த முதலமைச்சர் ஸ்டாலின்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.