- Dengue Fever: அதிவேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்; தடுக்க இதையெல்லாம் செய்யுங்கள் -மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
இந்தியாவில் டெங்கு காய்ச்சல் நிலைமை மற்றும் டெங்கு பாதிப்புகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், டெங்குவைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதற்கான பொது சுகாதார அமைப்பின் தயார்நிலை ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, டெங்கு காய்ச்சல் தடுப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதிலும், முழுமையாக தயார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். மேலும் படிக்க
- World UnIversity Rankings: உலக தரவரிசைப் பட்டியல்: 2 இடங்களை பிடித்த தமிழக பல்கலைகழகங்கள்! இந்தியாவில் 91 - முழு விபரம்
டைம்ஸ் நிறுவனத்தின் 2024ம் ஆண்டின் உலக பல்கலைக்கழங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இந்த ஆய்வில் 1,799 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றன. நடப்பாண்டு அதாவது 20வது ஆண்டு வெளியான இந்த தவரிசைப்பட்டியலில் 108 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த, 1,904 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுளன. அவை, கற்பித்தல், ஆராய்ச்சி தரம், ஆராய்ச்சி சூழல், சர்வதேச கண்ணோட்டம் மற்றும் தொழில் ஆகிய ஐந்து அம்சங்களின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு, இந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் படிக்க
- காவிரி விவகாரம்; மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடும் கர்நாடகா - தமிழ்நாட்டுக்கு நெருக்கடி
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கேட்டு முதலில் தண்ணீரை திறந்து விட்டாலும் பின்னர், தண்ணீர் தருவதை கர்நாடக நிறுத்தியது. பின்னர், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் தண்ணீர் தரப்பட்டது. 15 நாள்களுக்கு தண்ணீர் தர வேண்டும் என்ற கெடு இன்றோடு முடிவடைந்துள்ளது. இச்சூழலில், நாளை தொடங்கி வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை, 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்குமுறை குழு உத்தரவிட்டுள்ளது. மேலும் படிக்க
- "திறமைசாலிகள இழந்துட்டு இருக்கோம்" - நீதிபதிகள் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காட்டம்
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பே, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை பரிந்துரை செய்து வருகிறது. அந்த பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு நீதிபதிகளை நியமிக்கலாம். ஆனால், சில சமயங்களில், கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்காமலும் இருந்துள்ளது. இதற்கிடையே, கொலீஜியம் அமைப்புக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டே நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும் சமமான அதிகாரம் வழங்கும் தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. ஆனால், அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆணையத்தை கலைத்தது. மேலும் படிக்க
- NIA Raid: நாடு முழுவதும் களமிறங்கிய என்.ஐ.ஏ அதிகாரிகள்.. 6 மாநிலங்களில் 51 இடத்தில் அதிரடி ரெய்டு
தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நாடு முழுவதும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு எதிராக தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது. ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப், உத்தராகண்ட் மற்றும் டெல்லியை சுற்றியுள்ள பகுதிகள் உட்பட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. காலிஸ்தான் பயங்கரவாதிகள், ஆதரவாளர்கள் மற்றும் தொடர்புடைய தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு இருக்கும் சந்தேக நபர்களின் இடங்களில் தற்போது தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது. இன்று (செப்டம்பர் 27) அதிகாலை தொடங்கிய இந்த சோதனைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. மேலும் படிக்க