பாரத் ட்ரோன் சக்தி 2023


உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள ஹிண்டனில் ‘பாரத் ட்ரோன் சக்தி-2023’ கண்காட்சியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வின் போது, ​​இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சௌதாரி உட்பட உயர் இராணுவ அதிகாரிகள் முன்னிலையில் அமைச்சர் சி-295 போக்குவரத்து விமானத்தை முறையாக இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கிறார் என இந்திய விமானப்படை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க..


காய்கறி விலை நிலவரம்


ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.மேலும் வாசிக்க..


செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன?


செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 278 கனஅடியாக இருந்தது.  இந்த நிலையில் செம்பரம்பாக்கம் பகுதியில் 26.40  மில்லி மீட்டர் மழை பெய்ததால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது.  மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து  775 கனஅடியாக உள்ளது.  செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடியில் நீர் இருப்பு 20.39  அடியாக உள்ளது.  செம்பரம்பாக்கம் ஏரியில்   3.6 டிஎம்சி நீர் தேக்கி வைக்க முடியும்,  தற்பொழுது நீர் இருப்பானது 2.7   டிஎம்சி ஆக உள்ளது.  மெட்ரோ சிப்காட் உள்ளிட்ட தேவைக்காக  138 கன அடி நீர்   வெளியேற்றப்பட்டு வருகிறது.  இதே போன்று சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய பல்வேறு ஏரிகளிலும் தேவையான அளவு தண்ணீர் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..மேலும் வாசிக்க..


சென்னையில் மழை 


சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சிய்யின் காரணமாக தமிழ்நாட்டில் வருகின்ற 30ம் தேதி வரை ஆங்காங்கே மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..மேலும் வாசிக்க..


கோலாகலமாக நடைபெறும் பிராம்மோற்சவம்..


ஆண்டுதோறும் திருமலை திருப்பதி கோயிலில் பல உற்சவங்கள் நடைபெரும். அதில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வைகுண்ட ஏகாதசி மற்றும் பிரம்மோற்சவம் தான். குறிப்பாக புரட்டாசி மாதம் வரும் திருவோண நட்சத்திரத்தில் வெங்கடாஜலபதி பிறந்தநாள் அனுசரிக்கப்படுவதால் அந்த மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. திருமலையில் இருக்கும் திருவேங்கடமுடையான் பிரம்மதேவருக்கு தனக்கு உற்சவம் நடத்த சொல்லிக் கேட்டார். அப்படி பிரம்மதேவர் நடத்தும் உற்சவம் என்பதால் பிரம்மோற்சவம் என அழைக்கப்படுகிறது.மேலும் வாசிக்க..


 பிரக்யான் ரோவர் - இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம்


நிலவின் தென் துருவத்தை ஆராயும் நோக்கில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக அங்கு தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த லேண்டர் மற்றும் ரோவர் பல்வேறு ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டன. தொடர்ந்து, நிலவின் தென்துருவத்தில் சூரிய ஒளி குறைய தொடங்கியதை அடுத்து, லேண்டர் மற்றும் விக்ரம் ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டது. 14 நாட்கள் கழித்து கடந்த 20ம் தேதி முதல் தென் துருவத்தில் சூரிய ஒளி படர தொடங்கியுள்ளது. மேலும் வாசிக்க..