உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள ஹிண்டனில் ‘பாரத் ட்ரோன் சக்தி-2023’ கண்காட்சியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வின் போது, ​​இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சௌதாரி உட்பட உயர் இராணுவ அதிகாரிகள் முன்னிலையில் அமைச்சர் சி-295 போக்குவரத்து விமானத்தை முறையாக இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கிறார் என இந்திய விமானப்படை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  






குறிப்பிடத்தக்க வகையில், உள்நாட்டு ஆளில்லா விமானம் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டின் திறனை அங்கீகரிக்கும் இந்திய விமானப்படை, இந்திய ட்ரோன் கூட்டமைப்புடன் இணைந்து ட்ரோன்-சக்தி, பாரத் ட்ரோன் சக்தி 2023 ஐ கூட்டாக நடத்துகிறது. செப்டம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்ட இந்த நிகழ்வு காசியாபாதில் உள்ள இந்திய விமானப்படையில் நடைபெறும்.  இந்தியாவில், ஆளில்லா விமானங்களின் பயன்பாடு மக்கள் மற்றும் இராணுவத் துறையில் அதிகரித்து வருகிறது. ட்ரோன் தொழில்நுட்பம் சிவில் மற்றும் பாதுகாப்புத் துறைகளை விரைவாக மாற்றி செயல்திறனை மேம்படுத்தியுள்ளது, அபாயத்தை குறைத்து திறன்களை உயர்த்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


இந்தியாவில் வளர்ந்து வரும் ட்ரோன் தொழில்நுட்பத் துறையைப் பயன்படுத்த, இந்திய விமானப்படை மெஹர் பாபா ஸ்வர்ம் ட்ரோன் போட்டியைத் தொடங்கியது, இது நாட்டின் ட்ரோன் திறன்களில் அதன் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இப்போது, ​​'ட்ரோன்-சக்தி - பாரத் ட்ரோன் சக்தி 2023’ உடன், IAF இந்த நிபுணத்துவத்தை மேலும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு நாள் கண்காட்சி இந்திய ட்ரோன் துறையின் முழு திறனையும் வெளிப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வின்போது 50 க்கும் மேற்பட்ட வான்வழி முன்னோட்டங்கள் நடத்தப்படும்.  கணக்கெடுப்பு ட்ரோன்கள், விவசாய ட்ரோன்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் ட்ரோன்கள், கண்காணிப்பு ட்ரோன்கள், ஹெவி-லிஃப்ட் லாஜிஸ்டிக்ஸ் ட்ரோன்கள், ட்ரோன் திரள்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ட்ரோன் பயன்பாடுகளை இந்த வான்வழி முன்னோட்டங்களில் இடம்பெறும்.


இரண்டு நாள் நிகழ்ச்சியின் போது சுமார் 75 க்கும் மேற்பட்ட ட்ரோன் ஸ்டார்ட் அப்ஸ் பங்கேற்பார்கள் அதுமட்டுமின்றி 5000 த்துக்கும் மேற்பட்டோர் இதில் கலந்துக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  'பாரத் ட்ரோன் சக்தி 2023' நிகழ்வு, 2030 ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய ட்ரோன் மையமாக மாறும் இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப இருக்கும்.  இந்திய விமானப்படை  தற்போது உளவுத்துறை கண்காணிப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளுக்காக தொலைதூர பைலட் விமானத்தைப் பயன்படுத்தி வருகிறது.  இந்தியாவில் வளர்ந்து வரும் ட்ரோன் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு திறன்களில் அதன் நம்பிக்கையை மெஹர் பாபா ஸ்வார்ம் ட்ரோன் போட்டி போன்ற நிகழ்வுகள் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.