• MP Kanimozhi: நாடாளுமன்றத்தில் தகாத வார்த்தைகளை பேசிய எம்.பி ரமேஷ் பிதூரி.. விசாரணை குழு அமைக்க எம்.பி கனிமொழி வலியுறுத்தல்..


திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி ரமேஷ் பிதூரி நாடாளுமன்றத்தில் தகாத வார்த்தைகளை சக எம்.பியை நோக்கி பயன்படுத்தியதற்கு எதிராக விசாரணை குழு அமைத்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற்றது. செபடம்பர் 18 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் முக்கியமாக மகளிருக்காக இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. நேற்று கடைசி நாள் கூட்டத்தொடரில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் சந்திரயான் 3 வெற்றி குறித்த விவாதம் மக்களவையில் நடைபெற்று கொண்டிருந்தது. மேலும் படிக்க 



  • அமித்ஷாவை சந்திக்க துடிக்கும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் - காரணம் என்ன?


அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், தன்னுடைய கூட்டணியை பலப்படுத்தும் வேலையில் பாஜக இறங்கியுள்ளது. குறிப்பாக, தென்னிந்தியாவை குறிவைத்து பாஜக வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடனான கூட்டணி உறுதியாகியுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாஜக திட்டமிட்டு வருகிறது. மேலும் படிக்க 



  • Lander Rover: சிக்னல் அனுப்பாத சந்திரயான் 3.. சோகத்தில் விஞ்ஞானிகள்.. இஸ்ரோ புதிய தகவல்


விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் நாடுகளையுமே ஆச்சரியப்படுத்தும் வகையில், திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக தரையிறக்கியது. இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.  இதையடுத்து லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றின் மூலம் நடைபெற்ற அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் நிலவில் பல்வேறு கனிமங்களுடன், ஆக்சிஜன் போன்ற வாயுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் படிக்க 



  • Chandrababu Naidu: சந்திரபாபு நாயுடுவுக்கு மேலும் நெருக்கடி.. ஆந்திரபிரதேச உயர் நீதிமன்றம் அதிரடி..!


கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறையின் நிதியை தவறுதலாக பயன்படுத்தி 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது.  இச்சூழலில், தனக்கு எதிராக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு வழக்கு தொடர்ந்தார். மேலும் படிக்க 



  • Rahul Gandhi: மகளிர் இடஒதுக்கீடு - சாதி வாரி கணக்கெடுப்பு, ஒபிசி உள் ஒதுக்கீடு கட்டாயம் - ராகுல் காந்தி பேச்சு


டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா நல்லது, அதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அதனை நிறைவேற்றாததற்கு வருந்துகிறேன். ஆனால், தற்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை திசை திருப்பும் தந்திரமாக பாஜக பயன்படுத்துகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரயறை முடிந்த பின்னரே மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க