தமிழ்நாடு:



  • தெற்கில் இருந்து வரும் குரல் - இன்று வெளியாகிறது முதலமைச்சர் ஸ்டாலினின் இரண்டாவது பாட்காஸ்ட் ஆடியோ

  • தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றக்கோரி தலைமையிடம் அதிமுக வலியுறுத்தல் - உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திக்க மறுத்ததால் அதிமுகவினர் ஏமாற்றம்

  • விசாரணைக்கு ஆஜராகாத நடிகர் விஷால் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால்  உயர்ந்திமன்றம்  மரியாதையை  தாழ்த்துவதாகிவிடும் -  நீதிபதி கடும் கண்டனம்

  • கொசு உற்பத்திக்கு காரணமாகும் வகையில் செயல்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை

  • சென்னை - நெல்லை இடையேயான ரயிலுக்கான கட்டணமாக ரூ. 1620 நிர்ணயம்

  • பெரியார் - மணியம்மை தொடர்பான தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் துரைமுருகன்

  • மீண்டும் கோவையில் போட்டியிடுகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் - பூத் கமிட்டியை வலுப்படுத்த தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்


இந்தியா:



  • பாஜகவின் கூட்டணியில் இணைந்த குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் - பாஜகவின் பீ டிம் அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் இணைந்துள்ளதாக காங்கிரஸ் விமர்சனம்

  • நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி., ரமேஷ் பிதூரியின் அநாகரீக பேச்சுக்கு வலுக்கும் கண்டனங்கள் -  கைது செய்து வாழ்நாள் தடை விதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் 3 பேருக்கு அனுமதி மறுப்பு விவகாரம் - தொடக்க விழாவில் பங்கேற்கவிருந்த மத்திய விளையாட்டு அமைச்சரின் சீன பயணம் ரத்து

  • பேரியம்  மற்றும் சரவெடி கொண்ட பட்டாசு தயாரிக்க அனுமதி கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் - தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

  • வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் - பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்

  • சந்திரயான் 3 திட்டத்தின் ரோவரை தொடர்பு கொள்ளும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது - தற்போது வரை எந்த சிக்னலும் இல்லை என இஸ்ரோ தகவல்

  • ஒரே நாடு ஒரே தேர்தல்  - முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான சிறப்பு குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது


உலகம்:



  • இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் -பாலஸ்தீனியர்கள் இடையே மோதல் -  22 பேர் காயம்

  • உக்ரைனுக்கு தொடர்ந்து பொருளாதார உதவிகளை வழங்குவோம் - கனடா பிரதமர் ட்ரூடோ அறிவிப்பு

  • அமெரிக்காவில் 40 மாணவர்களுடன்  சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு

  • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக  சிங்கப்பூர் வாழ் இந்தியருக்கு 2 ஆண்டுகள் சிறை

  • ஹிஜாப் அணியாத பெண்களுக்கு 10 ஆண்டுகள் சிறை - புதிய சட்டத்திற்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் 


விளையாட்டு:



  • ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி - இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அபாரம்

  • ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட் என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளின், தரவரிசைப்பட்டியலிலும் முதலிடம் பிடித்து இந்தியா அசத்தல்

  • உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில்  சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு  33 கோடி ரூபாய் பரிசுத்தொகை - 2வது இடம் பிடிக்கும் அணிக்கு 16 வழங்கப்படும் என ஐசிசி அறிவிப்பு

  • 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது - 45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்து 500 வீரர்கள் பங்கேற்கின்றனர்

  • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி-20 உலகக்கோப்பை தொடர் - போட்டிக்கான இடங்களை அறிவித்தது ஐசிசி