- பரபரக்கும் 5 மாநில தேர்தல்: தென்னிந்தியாவில் பாஜக? தலைமை தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை..
5 மாநில சட்டமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது. சத்தீஷ்கர், தெலங்கானா, ராஜஸ்தான், மிசோரம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களிலும் நடப்பாண்டு இறுதிக்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மிசோரம் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 17ம் தேதி முடிவடைய, மற்ற மாநில சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வரும் ஜனவரி மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் முடிவடைய உள்ளது. இதில் தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க..
- சிறையில் தவிக்கும் சந்திரபாபு நாயுடு.. இரண்டு வாரங்களுக்கு மேல் காவல் நீடிப்பு..
ஊழல் வழக்கில் கைதான சந்திரபாபு நாயுடுவுக்கு இரண்டு வாரங்களுக்கு காவலை நீடித்து விஜயவாடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறையின் நிதியை தவறுதலாக பயன்படுத்தி 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அம்மாநில அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. மேலும் படிக்க..
- ஐந்து மாநில தேர்தலுக்கு ஸ்கெட்ச்.. பாஜகவை எதிர்க்க உத்தி என்ன? காங்கிரஸ் அதிரடி..
கடந்த 2014ஆம் ஆண்டு முதல், மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரம், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த முனைப்பு காட்டி வருகின்றன. மேலும் படிக்க..
- ஆம் ஆத்மிக்கு நெருக்கடி.. சிசோடியாவை தொடர்ந்து எம்பி சஞ்சய் சிங்குக்கு ED காவல்..
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து, அவரை அதிரடியாக கைது செய்தனர். இந்த நிலையில், சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார்போல், டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 5 நாள்கள் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் படிக்க..
- அறிவியலுக்கு முக்கியத்துவம் தந்த திரைப்படம் The Vaccine War ஐ புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி..
ராஜஸ்தானில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநில அரசியலை பொறுத்தவரையில், கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சி, தேர்தலில் வென்றதாக சரித்திரமே இல்லை. பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. மேலும் படிக்க..
- புரட்டி போட்ட கனமழை.. நிலைகுலைந்து போன சிக்கிம்.. உயிரிழப்பு 14 ஆக் அதிகரிப்பு..
சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் ஏரிப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட மேகம் வெடிப்பால் கனமழை கொட்டியது. தொடர்ந்து, சுங்தாங் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், நீர்மட்டம் திடீரென 15-20 அடி உயரத்திற்கு உயர்ந்தது. இதனால், லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் படிக்க..