பசவராஜ் பொம்மை மருத்துவமனையில் அனுமதி


கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.முழங்கால் வலி தொடர்பான அறுவை சிகிச்சைக்காக மருத்துவர் ஆலோசனையின் பேரில், பன்னர்கட்டா சாலையில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் பசவராஜ் பொம்மை அனுமதிக்கப்பட்டுள்ளார்.   கடந்த சில வருடங்களாகவே அவர் கடுமையான முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். தினசரி நடவடிக்கைகளுக்காக நடந்து செல்வதும் அவருக்கு சிரமமாக இருந்தது.  இருப்பினும், அவர் அரசியல் நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.மேலும் வாசிக்க..


தன்பாலின திருமணம் - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு


ஆண் மற்றொரு ஆணையும், பெண் மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்வதை, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க கோரிய மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.தன்பாலின தம்பதி மற்றும் சில அமைப்புகளின் சார்பில், இந்தியாவில் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என 21 மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பான விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரண நடத்தி வருகிறது. மேலும் வாசிக்க..


ககன்யான் திட்டம்.. 


மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் அக்டோபர் 21ல் நடைபெறும் என்றும், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து அக்டோபர் 21ம் தேதி காலை 7 முதல் 9 மணிவரை சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.மனிதர்களை விண்கலத்தில் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் 400 கி.மீ கொண்டு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலையில் 3 பேர் கொண்ட குழுவை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம்தான் ககன்யான் திட்டம். மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்வெளிப் பயணத்தின்போது இந்திய விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் குழுவை சோதிப்பதற்காக சோதனை வாகன மேம்பாட்டு விமானம் (டிவி-டி-1) அடுத்த ஆண்டு பிற்பகுதியில் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடத்தப்பட இருக்கிறது. மேலும் வாசிக்க..


ரத்தத்தின் ரத்தங்கள் உருவான கதை..!


கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது அதிமுக தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் பிடித்து அசத்தி இருந்தது. இந்தளவிற்கு பலமான கட்டமைப்பை கொண்டிருக்கும்,  அதிமுக  என்ற அமைப்பு  உருவாவதற்கு, ஒரு மேடைப்பேச்சு தான் காரணம் என்றால் நம்ப முடியுமா? செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில்,  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்.ஜி .ஆர் பேசியதின் விளைவு தான்  அதிமுக கட்சி உருவாக காரணம். திருக்கழுக்குன்றத்தில் 52 ஆண்டுகளுக்கு முன் என்னதான் நடந்தது,  என்பது குறித்து பார்க்கலாம்.மேலும் வாசிக்க..


மத்திய அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்..


இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 மீனவர்கள் மற்றும் அவர்களது ஐந்து மீன்பிடிப் படகுகளை விடுவித்திட வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று (16-10-2023) கடிதம் எழுதியுள்ளார். மேலும் வாசிக்க..


தெலங்கானா தேர்தல்


 தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் நவம்பர் 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் நிலவும் முக்கிய பிரச்னைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.நவம்பர் 30ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  ஆளுங்கட்சியான பிஆர்எஸ் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அதேநேரம், பாஜக மற்றும் அசாதுதின் ஓவைசியின் AIMIM ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் பெரும் தாகக்த்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வாசிக்க..