தமிழ்நாடு:
- தமிழ்நாட்டில் 33 இடங்களில் நிபந்தனையுடன் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
- உடல்நலக்குறைவால் ஒத்திவைக்கப்பட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் “என் நாடு என் மக்கள்” பாதயாத்திரை மீண்டும் தொடக்கம்
- சேலத்தில் மீண்டும் 2 ஆண்டுகளுக்கு பிறகு விமான சேவை தொடக்கம் - பொதுமக்கள் மகிழ்ச்சி
- இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும் - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
- குலசேகரபட்டினம் இரண்டாம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு இடம் வழங்கிய தமிழக அரசு - முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத்
- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 1 வயது குழந்தை - 2 மணி நேரத்தில் மீட்டு போலீசார் அசத்தல்
- அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு
- லியோ திரைப்படத்துக்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைக்குமா? - தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை
- தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலாக மழை - வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
- பள்ளிக்கல்வித்துறையில் ஒரே நாளில் 9 இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் - 6 இணை இயக்குநர்களுக்கு பதவி உயர்வு
- தமிழக மீனவர்கள் கைதை கண்டித்து விரைவில் இலங்கை தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
- இணைந்து கொள்ளையடிப்பது தான் திமுக - காங்கிரஸ் கட்சிகளின் நோக்கம் என பாஜக தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனம்
இந்தியா:
- உத்தரப்பிரதேசத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம்
- வாச்சாத்தி வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி - குற்றவாளிகள் 6 வாரத்தில் சரணடைய உத்தரவு
- மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யாம் திட்டம் - அக்டோபர் 21 ஆம் தேதி சோதனை ஓட்டம் நடைபெறும் என இஸ்ரோ அறிவிப்பு
- தன் பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
- 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு - பிரதமர் மோடி வரவேற்பு
- பிரம்மோற்சவத்தால் திருப்பதியில் அலைமோதும் மக்கள் கூட்டம் - அன்ன வாகனத்தில் சுவாமி வீதி உலா
உலகம்:
- சட்ட விரோத பதிவுகளை சரியாக கையாளவில்லை என கூறி எக்ஸ் வலைத்தள நிறுவனத்துக்கு ஆஸ்திரேலிய அரசு ரூ.3 கோடி அபராதம்
- 11 வது நாளை எட்டிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் - தொடர் தாக்குதலால் உருக்குலைந்த காஸா
- ஹமாஸ் ஆயுதக்குழு பிடித்து வைத்துள்ள பணய கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள்
- ஹமாஸூடனான போர் “இருளுக்கும் ஒளிக்கும்” இடையேயான யுத்தம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து
விளையாட்டு:
- உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகள் மோதல்
- உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி
- 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட், ஸ்குவாஷ் உள்ளிட்ட 5 போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி
- தென் மண்டல சப்-ஜூனியர் ஹாக்கி போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
- ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோற்றது மிகப்பெரிய பின்னடைவு என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கருத்து