- 22 ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு தடை விதித்த மத்திய அரசு.. முழு விவரம் இதோ..
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY) மகாதேவ் புக் மற்றும் ரெட்டியன்னாபிரெஸ்டோப்ரோ உள்ளிட்ட 22 சட்டவிரோத சூதாட்ட செயலிகள் மற்றும் இணையதளங்களுக்கு எதிராக தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளை நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல், மிசோரம் மாநிலத்திலும் நாளை நவம்பர் 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல் இந்த மாதம் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாவட்டங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் டிசம்பவர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மேலும் படிக்க..
- காலநிலை மாற்ற பிரச்னைக்கு காரணமான உணவை ஒதுக்க வேண்டும்: குடியரசு தலைவர் முர்மு வேண்டுகோள்
காலநிலை மாற்றம் உலக நாடுகளின் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிக அளவில் வெள்ளம் ஏற்படுவதற்கும் இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதற்கும் காலநிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். இதை கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உலக உணவு இந்தியா நிகழ்ச்சியில் நிறை உரை ஆற்றிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, காலநிலை மாற்ற பிரச்னைக்கு காரணமான உணவை ஒதுக்க வேண்டும் என்றும் இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் படிக்க..
- நெருங்கும் தேர்தல்.. கேதார்நாத் கோயிலுக்கு திடீர் விசிட் அடித்த ராகுல் காந்தி
அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலின் செமி பைனலாக கருதப்படும் ஐந்து மாநில தேர்தல் நாளை மறுநாளுடன் (நவம்பர் 7ஆம் தேதி) தொடங்குகிறது. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. மிசோரம் மற்றும் சத்தீஸ்கரின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 17ஆம் தேதியும், நவம்பர் 25இல் ராஜஸ்தானிலும் நவம்பர் 30ஆம் தேதி, தெலங்கானாவிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் டிசம்பர் 3ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மேலும் படிக்க..
- மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த காங்கிரஸ்... சத்தீஸ்கரில் பூபேஷ் பாகல் போட்ட ஸ்கெட்ச்
பாஜகவின் செல்வாக்கு மிக்க மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரில், 15 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில்தான் காங்கிரஸ் முதல்முறையாக வெற்றிபெற்றது. அக்கட்சியின் மூத்த தலைவர் பூபேஷ் பாகல் தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இச்சூழலில், சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் முதல் கட்ட வாக்குப்பதிவும் வரும் 17ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில், பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியானது. மேலும் படிக்க..
- "புத்தகத்த படிச்சு வறுமைய கத்துக்கவேண்டிய அவசியம் எனக்கில்ல" மக்கள் முன்பு பிரதமர் மோடி உருக்கம்
பாஜக ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் ஒன்றாக மத்தியப் பிரதேசம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. பாஜகவின் கோட்டையாக கருதப்படும் மத்திய பிரதேசத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், 15 மாதங்களிலேயே கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சி அமைத்தது. மேலும் படிக்க..