தமிழ்நாடு:
- அதிமுக, பாஜகவுக்கு தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் டெபாசிட் கூட கிடைக்கக்கூடாது என திருவள்ளூரில் நடைபெற்ற பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
- தமிழ்நாட்டில் இன்று சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சிப்பதாக துரை வைகோ கடும் கண்டனம்
- நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை வீழ்த்த அதிமுக - பாஜக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தமாக தலைவர் ஜிகே வாசன் கருத்து
- அதிகரித்து வரும் மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
- புதுக்கோட்டையில் இன்று நடைபெற இருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையில் பாதயாத்திரை நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு
- ஜார்க்கண்டில் மருத்துவ மாணவர் மதன்குமார் மர்ம மரணம் - குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது
- நாகா இன மக்களை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இழிவுப்படுத்தியதை ஏற்க முடியாது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்,என்.ரவி எக்ஸ் தளத்தில் கருத்து
- களைகட்டிய தீபாவளி பண்டிகை விற்பனை - கடை வீதிகளில் மக்கள் குவிந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி
- சென்னையில் விபத்துகளை தடுக்கவே வேகக்கட்டுப்பாடு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் தகவல்
- மின் கட்டண உயர்வு, நூல் விலையேற்றத்தை கண்டித்து கோவை, திருப்பூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் 2வது நாளாக போராட்டம் - ரூ.100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்பு
இந்தியா:
- காலநிலை மாற்றத்துக்கு காரணமான உணவுகளை ஒதுக்க வேண்டும் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வேண்டுகோள்
- நாளை சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு - திடீரென கேதர்நாத் கோயிலுக்கு சென்ற ராகுல்காந்தி
- ஆயுதப்படைகளில் பணியாற்றும் அனைத்து பெண்களுக்கும் விடுப்பில் சலுகை வழங்கப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
- சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் சட்டமன்ற தேர்தலில் நாளை வாக்குப்பதிவு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- டெல்லியில் மோசமடையும் காற்றின் தரம் - ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுமாறு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
- ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் 5 ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக
- இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் குறித்து கருத்து சர்ச்சை- சுயசரிதையை திரும்ப பெறுவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு
உலகம்:
- தீவிரமடையும் போர் - காசா நகரத்தை சுற்றி வளைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு
- போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் தொற்றுநோய் பரவி வருவதாக ஐ.நா. கவலை
- காசா மீது அணுகுண்டு வீச வாய்ப்பு இருப்பதாக கூறிய இஸ்ரேல் அமைச்சரை சஸ்பெண்ட் செய்து பிரதமர் பென்சமின் நெதன்யாகு அதிரடி
விளையாட்டு:
- உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி
- உலகக்கோப்பை போட்டியில் இன்றைய ஆட்டத்தில் வங்கதேசம் - இலங்கை அணிகள் பலப்பரீட்சை
- பாரீஸ் மாஸ்டர் டென்னிஸ் தொடரில் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சாம்பியன் ஆனார்
- பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி தொடர் - இந்திய அணி சாம்பியன்
- ஒருநாள் கிரிக்கெட்டில் 49வது சதமடித்து அசத்திய விராட் கோலி - பாராட்டிய சச்சின், தங்க பேட் வழங்கிய மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம்