மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY) மகாதேவ் புக் மற்றும் ரெட்டியன்னாபிரெஸ்டோப்ரோ உள்ளிட்ட 22 சட்டவிரோத சூதாட்ட செயலிகள் மற்றும் இணையதளங்களுக்கு எதிராக தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.


சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளை நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  அதேபோல், மிசோரம் மாநிலத்திலும் நாளை நவம்பர் 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல் இந்த மாதம் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாவட்டங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் டிசம்பவர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.


நாளை நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றும் என கருத்துகணிப்புகள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட செயலிகல் மோசடி ஈடுபட்டி வருவதாக அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. குறிப்பாக மகாதேவ் என்ற சூதாட்ட செயலி நிறுவனத்தின் மோசடி தொடர்பாக பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மகாதேவ் உள்ளிட்ட 22 செயலிகளுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கும் படி மத்திய அரசுக்கு அமலாக்கத்துறை பரிந்துரை செய்தது. இதனை ஏற்ற மத்திய அரசு 22 செயலிகளுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


மஹாதேவ் புத்தகத்தின் உரிமையாளர்கள் தற்போது காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) பிரிவு 19ன் கீழ் பணமோசடி செய்த குற்றத்திற்காக, பிஎம்எல்ஏ, 2002 இன் பிரிவு 4ன் கீழ் தண்டிக்கப்படும் பிரிவு 3ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிரிவு 69A தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் இணையதளம்/ செயலியை முடக்க பரிந்துரைக்கும் அனைத்து அதிகாரமும் சத்தீஸ்கர் அரசுக்கு இருப்பதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தெரிவித்தார். ” இருப்பினும், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர்கள் விசாரணை செய்து வரும் நிலையில், மாநில அரசால் அத்தகைய கோரிக்கை எதுவும் முன்வைக்கப்படவில்லை. உண்மையில், முதல் மற்றும் ஒரே கோரிக்கை அமலாக்கத்துறையிடம் இருந்து பெறப்பட்டு, அது செயல்படுத்தப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.  


கைது செய்யப்பட்ட அஸிம் தாஸ் என்பவரிடமிருந்து பெறப்பட்ட ரூ. 5 கோடி அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேலுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக கொடுக்கப்பட இருந்ததாக தெரிய வந்துள்ளது என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அஸிம் தாஸ் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று பணம் எடுத்து வந்துள்ளதாகவும், அவர் அந்த செயலி நிறுவனத்திற்கு அரசிற்கும் இடையே பணம் விநியோகிக்கும் ஏஜெண்டாக இருந்துள்ளதாக தெரிய வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காலநிலை மாற்ற பிரச்னைக்கு காரணமான உணவை ஒதுக்க வேண்டும்: குடியரசு தலைவர் முர்மு வேண்டுகோள்


Pradeep Anthony: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா.. பெண்கள் சூழ ரெட்கார்டுடன் கொண்டாட்டம்... பிரதீப் ஆண்டனி பதிவு!


நெருங்கும் தேர்தல்.. கேதார்நாத் கோயிலுக்கு திடீர் விசிட் அடித்த ராகுல் காந்தி