• விடுபட்ட மகளிருக்கு தீபாவளி பரிசு.. ரூ.1000 வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்..!


அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கான ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு  35 ஆயிரத்து 925 முகாம்கள் நடத்தப்பட்டு பெறப்பட்டது. ஒரு கோடியே 63 லட்சம் பேர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்தனர். இதில் சுமார் 56 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தகுதியுள்ள 1.65 கோடி மகளிருக்கு உரிமைத்தொகையானது கடந்த 2 மாதங்களாக அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க: விடுபட்ட மகளிருக்கு தீபாவளி பரிசு.. ரூ.1000 வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்..!




  • ஆளுநர் ஆர். என். ரவிக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை




சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, அவர் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறி  தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 32-வது பிரிவின் கீழ் இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழ்நாடு மாநில சட்டமன்றம் அவரது ஒப்புதலுக்காக அனுப்பிய மாநில அரசின் கோப்புகள், உத்தரவுகள் மற்றும் கொள்கைகளை ஆளுநர் பரிசீலிக்காதது அரசியலமைப்பிற்கு எதிரானது, சட்டவிரோதமானது, தன்னிச்சையானது, நியாயமற்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க: ஆளுநர் ஆர். என். ரவிக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை




  • அவங்களுக்கு பகவான் ராமர் கற்பனை கதாபாத்திரம்: காங்கிரஸை அட்டாக் செய்த பிரதமர் மோடி




பாஜகவின் கோட்டைகளில் ஒன்றாக கருதப்படும் மத்தியப் பிரதேசத்தில் கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகளாக, பாஜக ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், 15 மாதங்களிலேயே கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சி அமைத்தது. மேலும் படிக்க: அவங்களுக்கு பகவான் ராமர் கற்பனை கதாபாத்திரம்: காங்கிரஸை அட்டாக் செய்த பிரதமர் மோடி




  • தங்கம் தென்னரசுவுக்கு செக் வைத்த சொத்துக்குவிப்பு வழக்கு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..




தமிழ்நாடு அரசின் தற்போதைய மின்சாரம் மற்றும் நிதியமைச்சராக தங்கம் தென்னரசு பதவி வகித்து வருகிறார். கடந்த 2006-2011 ஆம் ஆண்டில் இருந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.  தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடைபெற்று அதிமுக ஆட்சியை பிடித்தது. இதற்கிடையில் 2012 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.76,40,443 சொத்து குவித்ததாக தங்கம் தென்னரசு மற்றும் மனைவி மணிமேகலை மீதும் வழக்கு தொடரப்பட்டது. மேலும் படிக்க: தங்கம் தென்னரசுவுக்கு செக் வைத்த சொத்துக்குவிப்பு வழக்கு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..




  • ’காற்று வாங்கும் தியேட்டர்கள்’ ... தீபாவளி படங்களின் பரிதாப நிலைமை.. என்ன ஆச்சு ரசிகர்களுக்கு?




நாளை மறுநாள் (நவம்பர் 12) தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை பண்டிகை வரும் நிலையில் வெளியூரில் உள்ள மக்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்க கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே தீபாவளி படங்கள் இன்று வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள 5 படங்களில் 4 படங்கள் மட்டும் இன்று ரிலீசாகிறது. மேலும் படிக்க: Diwali Movies: ’காற்று வாங்கும் தியேட்டர்கள்’ ... தீபாவளி படங்களின் பரிதாப நிலைமை.. என்ன ஆச்சு ரசிகர்களுக்கு?