• வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்.. கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு


கர்நாடகாவில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். கிரஹ ஜோடி என்ற பெயரில் இந்த திட்டம் அழைக்கப்படுகிறது. இந்த  திட்டம் வணிக நோக்கங்களுக்கு மின்சாரம் பயன்படுத்துவோருக்கு பொருந்தாது எனவும், இதற்காக வாடிக்கையாளர் எண்ணுடன், வங்கியின் நுகர்வோர் எண் மற்றும் ஆதார் எண்ணையும் சேர்த்து இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • ஏசி கோச்சில் வெளியான புகை... பதறி போன பயணிகள்... ஒடிசா ரயிலில் பரபரப்பு..!


ஒடிசா ரயில் விபத்து உலக மக்களை அதிர்ச்சி கலந்த சோகத்தில் ஆழ்த்திய நிலையில்,  செகந்திராபாத் - அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சில் இருந்து புகை வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் சிலர், முதலில் B-5 பெட்டியில் புகை வருவதைக் கண்டு அலாரம் எழுப்பினர். பிரம்மாபூர் நிலையத்திற்கு வந்த போது  ஊழியர்கள் பிரச்னையை உடனடியாக சரி செய்தனர். முன்னதாக ரயிலில் இருந்து கீழே இறங்கிய பயணிகள் மீண்டும் ரயிலில் ஏற மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க




  • பிரதமரின் ஆட்சிக்காலத்தில், பெண்களுக்கு ரூ.27 கோடி முத்ரா கடன் வழங்கப்பட்டுள்ளது: அமித்ஷா பேச்சு




முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.27 கோடி கடனுதவியாக மத்திய அரசு வழங்கியுள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பிரதமரின் முத்ரா திட்டம், பிரதமர் நரேந்திர மோடியால் 08, ஏப்ரல் 2015 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் வாயிலாக பெருநிறுவனங்கள் அல்லாத தொழில் துறையினர், விவசாயம் அல்லாத சிறு/குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.முத்ரா கடன் மூலம் பெண் சக்திகள் இன்று தேசத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகின்றனர் எனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் படிக்க



  • பதைபதைக்க வைக்கும் பயங்கரம்.. 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை.. மீட்கும் பணி தீவிரம்..


மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஷெஹோர் எனும் கிராமத்தில் 2.5 வயது குழந்தை ஒன்று 200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. அந்தக் குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.நேற்று மதியம் 2.45 மணியளவில் குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. கிராமவாசிகள் உள்ளூர் பஞ்சாயத்து அலுலவகத்தை அணுக அது மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்க உடனடியாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.  இந்நிலையில் குழந்தையை பத்திரமாக மீட்டு விடுவோம் என்று மாவட்ட ஆட்சியர் மிஸ்ரா  நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க



  • தேர்தல் நமது உரிமை; அதற்காக பிச்சை எடுக்க மாட்டோம்" - ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா 


ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படாததற்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். . ஜம்மு காஷ்மீரில் ஏன் தேர்தல் நடத்தப்படவில்லை என்பதை தேர்தல் ஆணையம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.தேர்தல் ஆணையம் கொஞ்சம் தைரியம் காட்டி, தாங்கள் அழுத்தத்தில் இருப்பதாகச் சொல்லட்டும். ஏதோ ஒன்று சரி இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க