தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த சுறாவளி புயல்,  "பிபர்ஜாய்" (பிபோர்ஜாய் என்று உச்சரிக்கப்படுகிறது) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிபர்ஜாய் என்ற பெயருக்கு ஆபாயம் என்பது அர்த்தம். இந்த புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு  5 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, அட்சரேகை (latitude) 12.3°N மற்றும் தீர்க்கரேகை (longitude) 66.0°E பகுதியில் மையம் கொண்டுள்ளது. அதாவது கோவாவின் மேற்கு-தென்மேற்கே சுமார் 910 கிமீ தொலைவில், 1030 கிமீ மும்பைக்கு தென்மேற்கே, போர்பந்தருக்கு தென்-தென்மேற்கே 1110 கி.மீ மற்றும் கராச்சிக்கு தெற்கே 1410 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில்,  கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக தீவிரமடைந்து தீவிர சூறாவளியாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


அரபிக்கடல் பகுதிகள்:


07.06.2023: வடக்கு கேரள– கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40  முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மத்தியகிழக்கு  மற்றும்  அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்   சூறாவளிக்காற்று 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு, மாலை முதல்  அதே பகுதிகளில் காற்றின் வேகம் உயர்ந்து மணிக்கு 80  முதல் 90  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


08.06.2023:   கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40  முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய  மேற்கு மற்றும்  தெற்கு அரபிக்கடல்  பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 90  முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு, மாலை முதல்  அதே பகுதிகளில் காற்றின் வேகம் உயர்ந்து மணிக்கு 95  முதல் 105  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 115  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


09.06.2023:   கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40  முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


தெற்கு அரபிக்கடல்  பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய  மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 105 முதல் 115 லோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 125  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு, மாலை முதல்  அதே பகுதிகளில் காற்றின் வேகம் உயர்ந்து மணிக்கு 125  முதல் 135  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


10.06.2023:   வடக்கு கர்நாடக  கடலோரப்பகுதிகள் மற்றும்  தெற்கு அரபிக்கடல்  பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய  மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 125  முதல் 135  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


வங்கக்கடல் பகுதிகள்:


 07.06.2023: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


அந்தமான் கடல் பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


08.06.2023 மற்றும் 09.06.2023: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோரப்பகுதிகள்,  வடக்கு அந்தமான் கடல் பகுதிகள்  மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மத்திய  மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


10.06.2023: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோரப்பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய  மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
 
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். அரபிக்கடலின் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.